Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh

மட்டக்களப்புக்குள் நுழைய பொதுபல சேனாவுக்கு நீதிமன்றம் தடை! - சுமனரத்ன தேரரால் பதற்றம்!!

மட்டக்களப்புக்குள் நுழைய பொதுபல சேனாவுக்கு நீதிமன்றம் தடை! - சுமனரத்ன தேரரால் பதற்றம்!!

பொதுபல சேனா அமைப்பினரை குறித்த பகுதிக்குள் உள்நுளைய விடுமாறு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சிறிலங்கா பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

»மேலும்

செய்திகள்

கடற்கரும்புலிகளின் தாக்குதல் படகுகளின் திறன் தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு சிறிலங்கா கடற்படை விளக்கம்!

கடற்கரும்புலிகளின் தாக்குதல் படகுகளின் திறன் தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு சிறிலங்கா கடற்படை விளக்கம்!

திருகோணமலைத் துறைமுகத்துக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினருக்கு கடற்கரும்புலிகளின் தாக்குதல் படகுகளின் திறன் ...

நாரந்தனையில் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை ஈபிடிபியினரே நடத்தினர்! - நேரில் கண்டவர்கள் சாட்சியம்!!

நாரந்தனையில் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை ஈபிடிபியினரே நடத்தினர்! - நேரில் கண்டவர்கள் சாட்சியம்!!

'நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதுல் நடத்தியவர்கள் ஈ.பி.டி.பியினர் தான். அது எமக்கு நன்றாகவே தெரியும்' ஏனு கண்கண்ட ...

படைத்தரப்பின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெதவெல ஓய்வு!

படைத்தரப்பின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெதவெல ஓய்வு!

சிறிலங்கா படைத்தரப்பின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெதவெல நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுள்ளார்.சிறிலங்கா படைத்தரப்பின் கவசப்படைப் ...

மேற்குலக நாடுகளுக்கு அடிபணியாது தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்! - சபையில் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

மேற்குலக நாடுகளுக்கு அடிபணியாது தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்! - சபையில் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

'அரசாங்கம் அமெரிக்காவுக்கும் ஜெனிவாவுக்கும் அடிபணிந்து செயற்படுவதானது நாட்டின் தேசிய ஐக்கியத்தைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும். ஆகவே, இதுதொடர்பில் அரசாங்கம் சிந்தித்து தமிழர்களின் ...

பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்த அந்த சேர் யார்? - நாடாளுமன்றில் ஜேவிபி கேள்வி!

பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்த அந்த சேர் யார்? - நாடாளுமன்றில் ஜேவிபி கேள்வி!

சிறிலங்கா பொலிஸ்மா அதிபரின் பகிரங்க தொலைபேசி உரையாடலானது அரசியல் களத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. பொலிஸ்மா அதிபரின் இந்தச் ...

போர் முடிந்ததால் தமிழர் பெட்டிப் பாம்புகளாக அடங்கிவிட்டதாக எவரும் நினைக்கக் கூடாது! - நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உரை!!

போர் முடிந்ததால் தமிழர் பெட்டிப் பாம்புகளாக அடங்கிவிட்டதாக எவரும் நினைக்கக் கூடாது! - நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உரை!!

'போர் முடிவடைந்ததால் தமிழர்கள் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடப்பார்கள் என எவரும் நினைக்கக் கூடாது. எமது மக்களிடம் நேர்க்குணமும் இருக்கிறது. ...

இவ் வாரம்...

மாவீரர்வார அரசியல்! - தெய்வீகன்

மாவீரர்வார அரசியல்! - தெய்வீகன்

தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிக முக்கிய வாரமாக அனுட்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல, எப்போதும் மாவீரர்களின் வாரமாக ...

»மேலும்

நான் மறுபடி பிறப்பேனேயாகின் மறுபடி இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன்

தமிழில்: யமுனா ராஜேந்திரன்

நான் மறுபடி பிறப்பேனேயாகின் மறுபடி இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன்

பிரச்னை சாதாரணமாக ஓய்வு பெறுதல் என்பது அல்ல. ஓய்வு பெறுவதற்கான சாத்தியம் - அதுதான் பிரச்னை. இரண்டும் வேறு வேறு விசயங்கள். முழுக்க முழுக்க நேர்மையாகச் சொல்கிறேன். எனது இலக்குகளை பிறர் நிறைவேற்றுவார்களானால் நான் ஓய்வுபெறவே விரும்புகிறேன். எனது சொந்தத் திருப்திக்காக எனது வேலையை நான் செய்யவில்லை. எனது கடமையாகச் செய்கிறேன். அதை மகிழ்ச்சியாகச் செய்கிறேன்.

»மேலும்

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!

தெய்வீகன்

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்: கொதிநிலத்தில் பகலவனை தேடும் குடிகள்!

புலம்பெயர் நாடுகளிலுள்ளவர் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து ராஜகோபுரங்களை கட்டி, மணிமண்டம் முதல் மடப்பள்ளிவரை தங்களது பெயர்களை பொறித்து அழகு பார்க்கிறார்கள். தங்களது சொந்த வீடுகளையும் காணிகளையும் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். ஆனால், யாருக்கும் அதனை கொடுக்கவோ அல்லது பராமரிப்பதற்கோ ஆவன செய்வதில்லை.

»மேலும்

மண்ணில் அந்த நாட்களின் நினைவுகள்

ஆதிலட்சுமி சிவகுமார்

மண்ணில் அந்த நாட்களின் நினைவுகள்

தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே.... பாடல் ஒலிக்கத்தொடங்க, விம்மல்களும் வெடிக்கும் அழுகையுமாக அந்தநேரம் அமையும். அடக்கிவைத்த துயரெல்லாம் இறக்கி வைத்தவர்களாக, பிள்ளைகளின் பிரிவுகள் மனதை அழுத்த எரியும் தீபங்களில் தங்கள் பிள்ளைகளின் முகங்களை மக்கள் தேடுவார்கள். போராட்டம் நசுக்கப்பட்பின் இன்று உயிரிழந்த தம் பிள்ளைகளை நினைந்து, தீபமேற்றுவதோ, வழிபாடு நடத்துவதோ குற்றச்செயலாக சொல்லப்படுகிறது.

»மேலும்

பிக்குக்களின் அரசியல்

நிலாந்தன்
பிக்குக்களின் அரசியல்
ஒரு நிறுவனமயப்பட்ட மதத்தைச் சார்ந்த ஒருவர் விடும் தவறுகளுக்கு அந்த மதத்தின் உயர்பீடம் ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய இனங்களை இழிவுபடுத்தும் ஒரு துறவிக்கு எதிராக இலங்கைத்தீவில் பௌத்த உயர் பீடங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன? அந்த நிறுவனம் அந்தத் துறவியின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறது என்று விளங்கிக் கொள்ளலாமா?

»மேலும்

தமிழ் மக்களுக்கான பற்றுக்கோடென்ன? - எதனைப் பற்றுவது? யாரைப் பற்றுவது?

மு.திருநாவுக்கரசு

தமிழ் மக்களுக்கான பற்றுக்கோடென்ன? - எதனைப் பற்றுவது? யாரைப் பற்றுவது?

தமிழ்த் தரப்பு எத்தகைய படிப்பினைகளை எதிலிருந்து பெற்றிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும். 1958 இனப்படுகொலையிலும், 1961 சத்தியாக்கிரகத்திலும் இருந்து தமிழ் அரசியல் தரப்பு பெறத்தவறிய படிப்பினையை இனி எதில் இருந்து பெறப்போகிறது?

»மேலும்

முஸ்லிம் போராளிகளின் பங்களிப்பும், தமிழ் - முஸ்லிம் இனங்களின் ஐக்கியமும்

ஞானி
முஸ்லிம் போராளிகளின் பங்களிப்பும், தமிழ் - முஸ்லிம் இனங்களின் ஐக்கியமும்
காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய பொட்டம்மான், இந்த ஊரை, காத்தவர் குடியென்றே கூறுவேன். போராட்டத்தின் நெருக்கடியான காலங்களில் எம்மைப் பாதுகாத்து உணவளித்தவர்கள் நீங்களே எனக் குறிப்பிட்டார். அக்காலத்தில் குறிப்பிடப்பட்டளவு முஸ்லிம் போராளிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

»மேலும்

இறுதிச் சொற்கள்

அர்ச்சுனா
இறுதிச் சொற்கள்

சவரம் செய்படா கருநிற தாடியை

மேவிப் படர்ந்து

புன்னகையை மறைத்தது சுருட்டின் புகை

கனவுகளில் நீ வந்தாய்

புரட்சியின் வேர்கள் கிளைவிட்டு விரிந்த

ஹவானாவின் அறியாத தொலைதூரத் தெருக்களில்

உனைத் தேடியலைந்தேன்

»மேலும்

Pongu Thamil

ஆயிரம் பூக்கள்

மாவீரர்தின அரசியல்

யதீந்திரா

ஒரு போராட்ட அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட நினைவுகளை ஒன்றில், அந்த போராட்ட அமைப்பு முன்னெடுக்க வேண்டும் அல்லது அந்த அமைப்பு எந்த மக்களுக்காக போராடியதோ அந்த மக்கள் அதனை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் போராடி வீழ்ந்தவர்களுக்கான சமூக அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படும்.

இல்லாவிட்டால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன்னுடைய சுயநல அரசியல் லாபங்களுக்காகவே அதனை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்.

»மேலும்

பார்வை

கூட்டமைப்பும் சேர்ந்து தமிழ்மக்கள் தலையில் பூச்சுற்றப் போகிறதா?

சி.அ.ஜோதிலிங்கம்

தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்பட்டு விட்டது. அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்யப்படலாம். மைத்திரி, ரணில் மட்டுமல்ல சம்பந்தனும் கூட நோபல் பரிசிற்கு சிபார்சு செய்யப்படலாம். எதிர்ப்பவர்கள் எல்லாம் மகிந்தரின் ஆட்கள், துரோகிகள் என முத்திரை குத்தப்படலாம்.

தமிழ்மக்கள் தங்கள் கைகளினாலேயே தங்கள் தலையில் மண் அள்ளிப் போடப்போகின்றார்களா?

»மேலும்

ஒலிப்பதிவுகள்
• செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

• ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

• மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

• முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

• புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
எம் காயங்களின் பெயரால் ஒன்றிணையுங்கள் - புலம்பெயர் சமூகத்தினர் மத்தியில் ஆய்வாளர் நிலாந்தன் உரை! (நோர்வே தமிழ்3 வானொலியின் 2ம் ஆண்டு நிறைவு நிகழ்வு – 01.03.15)

»மேலும்

முகநூல்