Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முள்ளிக்குளம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லதொரு தீர்வு! - ஆளுநர் உறுதி!!

<p>முள்ளிக்குளம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லதொரு தீர்வு! - ஆளுநர் உறுதி!!</p>முள்ளிக்குளம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதியுடன் பேசி, நல்லதொரு தீர்வு வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே உறுதியளித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே நேற்று வெள்ளிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அங்கு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பில் தமது பூர்வீக நிலங்களில் இருந்து சிறிலங்கா கடற்படையினரை வெளியேற்றி, தமது நிலங்களில் தம்மை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று முள்ளிக்குளம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதேவேளை, தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் முள்ளிக்குளம் மக்கள் வடமாகாண அளுநரிடம் உறுதியுடன் தெரிவித்தனர்.

இதன்போதே, முள்ளிக்குளம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி, நல்லதொரு தீர்வு வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, வன்னி மாவட்ட கிறிஸ்தவமத இணைப்பாளர் பாஸ்டர் சந்துரு மற்றும் பல அருட்தந்தையர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

4/22/2017 5:15:03 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்