Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்

இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்

 

மக்களை கிளிகளென இலவம் மரத்தில் கொண்டுபோய் இருத்துவதுபோல் இந்த வாக்குவேட்டை அரயலில் சிறந்த யுக்தி வேறில்லை என்பதை தலைவர்கள் நன்கு அறிவர். ஒருவேளை தங்கள் காலத்தில் இந்த இலவங்காய் வெடித்து பழத்துக்காக காத்திருந்த கிளிகள் எழுந்து பறந்தால் இன்னொரு இலவமரத்திற்கு கிளிகளை ஈர்ப்பதில்தான் அரசியல் சாதூரியமே தங்கி இருக்கிறது என்பதையும் தலைவர்கள் அறியாமல் இல்லை.

இனி வர இருப்பது தொடர் தேர்தல் காலம். மாகாண சபை, பாராளுமன்றம், சனாதிபதி தேர்தல்கள் என தொடரப்போகிறது. எனவே தேர்தலை சுற்றிய வியூகங்களும் அதற்கான அரசியலும் வரும். வாக்குறுதிகள் வாக்குகளை வேட்டையாடும் உள விஞ்ஞானம் அறிந்து வழங்கப்படுவதாய் இருக்கும். தமிழர் அரசியலில் பல புதிய வாக்கு வேட்டையாடும் யுக்திகள் புகுத்தப்படும். சரி கடந்த தேர்தலில் நல்லிணக்க அரசு மூலம் தமிழர்க்கான இனப்பிரச்சனைத் தீர்வு வழங்குவது என்ற இலவ மரத்தின் கதை என்னவாக போய்முடியும்?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கூட்டணி அமைத்து மாகாணசபையில் போட்டியிடுவது பற்றி பேசுகிறார். அவர் சொல்கிறார் அரசியல் யாப்பு மாற்றம் எளிதில் சாத்தியமில்லை,  பதின்மூன்றாம் திருத்த சட்டத்தில் மேலதிக இணைப்புகளைக் கொண்டுவருவதுதான்  உடனடிக்கு சாத்தியப்படக் கூடியது என்று. இலவங்காயை வெடிக்கவைத்து கிளிகளை கலைக்கிறாரா அவர்? அல்லது அவ்வாறு செய்துவிடுவேன் என்று கூட்டமைப்பை தன் பக்கம் திருப்ப முயல்கிறாரா? இல்லையெனில் கூட்டமைப்பில் இருந்து தான் துரத்தப்படும் நிலை உருவானதும் கூட்டமைப்பு தலைமைத்துவம் செயல் திறன் அற்றது என சாடும் முதலமைச்சர் இன்னொரு இலவ மரத்தை காட்டுகிறாரா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் யாப்பு மாற்றம்மூலம் தாம் தீர்வை கொண்டுவர முயல்வதகாவும் அதனால் குழப்பமின்றி மக்கள் ஒன்றுபட்டு உறுதியோடு இருக்கவேண்டும் என்றவாறாக பேசுகிறது. மக்கள் உறுதியோடு எங்கே இருப்பது அதே இலவ மரத்திலா? அரசும் இந்தவகையான அரசியலுக்காக, ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழுவை  அடுத்த மாதம் மீண்டும் கூட்ட இருக்கிறது. ஆக அதே மரத்தில் இன்னமும் காய்கள் தொங்கும் என்று தெரிகிறது.

பழமரம் எது? அதை எப்படி கண்டடைவது?

இந்த கூட்டு அரசாங்கம் உள்நாட்டு அரசியல் சூழலால் உருவாகியதல்ல. மாறாக இது சர்வதேச அரசியல் சூழலால் உருவாகியது. மேற்குலக -இந்தியக் கூட்டின் பிள்ளை இது. இதை பெற்றெடுப்பதற்கான பங்காளியாக தொழில்பட்டது த.தே கூட்டமைப்பும் தான். இந்த பாத்திர வகிப்பில் கூட்டமைப்புக்கு இருந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அதனால் முறையான பேரத்தில் ஈடுபட்டிருக்க முடியும்.

பின் -முள்ளிவாய்க்கால் அரசியலில் ரணில் மீண்டும் பதவிக்கு கொண்டுவரப்படும் சூழலை உருவாக்கி கொடுத்தது தமிழ்தரப்பே. அதேபோன்று மூன்றாம் தரப்பின் அனுசரணையுடன் சர்வதேச அரங்கில் இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் விடுத்திருக்க வேண்டும். அதுவே சரியான பேரமாக இருந்திருக்கும். ஏனெனில் புலிகளின் காலத்தில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்காகத்தான் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. அதற்குத்தான் சர்வேதேச ஒத்துழைப்பும் கிடைத்தது. ஒப்பந்தத்தை மீறி யுத்தம் வந்து புலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும் தமிழரின் இனப்பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது. இன்னும் சொன்னால் புலிகள் தீர்வுக்கு தடையாக இருக்கிறார்கள் என்ற முன்னைய வாதமும் இப்போ இல்லாது போய்விட்டது. எனவே தமிழர் அரசியல் அங்கிருந்துதான் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் பொறுப்புக் கூறும் தரப்பாக சர்வதேச சமூகத்தை இணைத்திருக்க முடியும். இதுவே குறைந்தபட்ச வழி.

இதற்கு மாறாக பின் -முள்ளிவாய்க்கால் அரசியலை தோற்றவர்களாக வென்றவர்களிடத்தில் போய்நிற்கும் அரசியலாக மாற்றியது த.தே கூட்டமைப்புதான். இதுதான் பின் -முள்ளிவாய்க்கால் தமிழ் அரசியலின் முதல் கோணல். வென்றவர்களிடத்தில் போய் நிற்கும் தோற்றவர்கள் என்ற அரசியல் இருப்பிலிருந்து நீதியான ஒரு தீர்வை பெற்றுவிட முடியும் என்று நம்புவதும் மக்களை நம்ப பண்ணுவதும் அரசியல் அயோக்கியம் அன்றி வேறென்ன. பழமரம் முன்னால் இருக்க இலவ மரத்தில் கிளிகளென மக்களை இருத்தியது என்ன வகையான அரசியல்?

இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்

தமிழ் தரப்பின் ஆதரவு இல்லையென்றால் இன்றைய கூட்டரசாங்கத்தை மேற்குலக -இந்தியக் கூட்டு உருவாக்கியிருக்க முடியாது. சீனாவுக்கு எதிரான உலகளாவிய வியூகத்தின் முக்கிய கண்ணியாக இருந்த இந்த விடயத்தில் தமிழ் தரப்பின் பேரம் உச்ச அளவில் இருந்தது. அதை ஏன் பயன்படுத்தி புலிகள் உருவாக்கி கொடுத்த சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் கூடிய பேச்சுவார்த்தையை கோரத் தவறியது தமிழ் தலைமை? நடந்த இனப்படுகொலையின் பின்னணியில் தமிழ் தரப்பின் கோரிக்கையையும் அதற்கான நியாயத்தையும் சர்வதேச அரங்கில் இன்னும் வலுவாக்கியிருக்க முடியும். முன்னைய பேச்சுகளின் அனுசரணை தரப்புகளை பொறுப்புக் கூற வைப்பதன் மூலம் குறைந்தபட்ச பாதுகாப்பை தமிழ் தரப்பு பெற்றிருக்க முடியும்.

சரி, இப்போது உள்ளூராட்சி தேர்தலின் பின் மீண்டும் புதிய சூழல் உருவாகியுள்ளது. அது மகிந்த ராஜபக்ச தன் வாக்கு வலிமையை நிரூபித்ததனால் உருவாகியது. இப்போதும் இந்த மேற்குலக இந்திய கூட்டு இதை எவ்வாறு கையாள்வதென திணறிப்போய் இருக்கிறது. மறுபடி மகிந்தவை தோற்கடிப்பதானால் அல்லது அதற்கான வியூகம் வகுப்பதானால் தமிழ் தரப்பை விட்டு அவற்றால் சிந்திக்க முடியாது. ஆக, காலம் இன்னொரு வாய்ப்பை தருகிறது. தமிழர்க்கு தலைமை தாங்க விரும்பும் தரப்புகள் இன்னொரு இலவ மரத்தை கண்டடையாமல் முறையான பேரத்தை முன்வைத்து புலிகள் விட்ட இடத்திலிருந்து விடுதலையரசியலை முன்னெடுக்கும் பழமரத்தை கண்டடைந்தாலென்ன? அதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தால் அவரை ஒரு செயல்திறனுள்ள தலைவர் என்று ஒப்புக்கொள்வதில் வரலாறுக்கென்ன தயக்கம் இருக்கப்போகிறது.

நன்றி: தமிழர் தளம்

5/17/2018 11:24:30 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்