Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நோர்வே - யாழ் பல்கலைக் கழகங்கள் இடையே தொழில் நுட்ப உதவி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து!

<p>நோர்வே - யாழ் பல்கலைக் கழகங்கள் இடையே தொழில் நுட்ப உதவி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து!</p>

 

மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும் யாழ் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கை ஒன்று கொழும்பில் இன்று கைத்சாத்தானது.

இன்று கொழும்பிலுள்ள நோர்வேஜிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில், இச் செயற்திட்டத் தலைவர்களான நோர்வே பல்கலைக்கழக பேராசிரியர் வே.தயாளன் மற்றும் யாழ் பல்கலைக்கழக போராசிரியர் ரவிராஜன் ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

நோர்வே தூதுவர் தூர்பியோர்ன் கௌஸ்டாட்சாதர் முன்னிலையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் நோர்வே தூதுவராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை முழுமையாக இங்கே தருகிறோம்.

மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும், யாழ். பல்கலைக்கழகத்திற்குமிடையில், இரு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களினால் இணை ஆய்வு மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இதன் அடிப்படையில், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகமானது, யாழ் பல்கலைக்கழகத்துடன் இன்று தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கை ஒன்றில் நோர்வே தூதர் மாண்புமிகு தூர்பியோர்ன் கௌஸ்டாட்சாதர் அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், தூயசக்தி தொழில்நுட்பம் சம்பந்தமாய் மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், நோர்வே மற்றும் இலங்கை தனியார் நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்குமுகமாகவும், நோர்வேயிய தூதுவாராலயத்தினால் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள உதவியின் உத்தேச மதிப்பீடு 112 மில்லியன் ரூபாய்கள் ஆகும்.

<p>நோர்வே - யாழ் பல்கலைக் கழகங்கள் இடையே தொழில் நுட்ப உதவி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து!</p>

நோர்வே தூதர் கௌஸ்டாட்சாதர் இவ்வுடன்படிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கையானது இலங்கையில் தூயசக்தி பற்றிய நிலைத்து நிற்கக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்கான பதிய திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் கொண்டுவரும் என நம்புகிறேன்' என்றார்.

உதவித்தொகையின் ஒரு பகுதி யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறை ஆய்வுகூடங்களை மேம்படுத்தவும் உதவும். நோர்வேயிய, இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் துறையினர் இணைந்த ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்குவது இந்த செயல்திட்டத்தின் ஒரு முக்கிய கூறு ஆகும்.

தூயசக்தி தொழில்துட்பமானது நோர்வேயில் மிகவும் முன்னுரிமை கொடுக்கப்பட்டநிலையில், இத்தொழில்நுட்பத்தில் மேலதிக கவனம் செலுத்தப்பட்டு, பல்கலைக்கழகங்களுக்கும் தனியார்துறைக்குமிடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களுக்கும் முதலீடுகளுக்கும் அடிகோலலாமென நோர்வே கருதுகிறது.

<p>நோர்வே - யாழ் பல்கலைக் கழகங்கள் இடையே தொழில் நுட்ப உதவி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து!</p>

இந்த செயற்திட்டத்தின்மூலம் நோர்வேயிய, இலங்கை தனியார்துறையினர், பல்கலைக்கழக சமூகத்திற்கு, உதவிகளையும், ஆலோசனைகளையும், தொழில் அனுபவங்ளைப்பெற வாய்ப்புகளையும் வழங்கி, தமது பங்களிப்பை ஆற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோர்வே தூதுவராலயத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த உதவியானது, ஏற்கனவே நோர்வேயிய நூர்பார்ட் திட்டத்தின்கீழ் செயற்பட்டுவரும் இரு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஆளணியினர் மத்தியிலான இணை ஆய்வு, அறிவு மேம்பாடு பற்றிய நடவடிக்கைகளுக்கு உறுதி சேர்க்கும். 2017 தொடக்கம் 2021 வரை நடைமுறையிலிருக்கும் இந்தத்திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபாய்கள் உதவியை நூர்பார்ட் திட்டம் ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், மேலும் நோர்வேயைச் சேர்ந்த பேர்கன் பல்கலைக்கழகம், அக்டர் பல்கலைக்கழகம், இலங்கை பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கோயம்பத்தூர் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம் என்பன இணைக்கப்பட்டுள்ளன.

7/7/2017 4:38:51 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்