Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலை மாணவர்கள் நேரில் சென்று ஆதரவு!

<p>கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலை மாணவர்கள் நேரில் சென்று ஆதரவு!</p>

 

கேப்பாப்புலவில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்களுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவில் 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 1ஆம் திகதி முதல் முல்லைத்தீவு படைமுகாமுக்கு முன்பாக இரவு பகலாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு நேற்றுச் சென்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள் கேப்பாப்புலவு மக்களுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

அத்துடன் இந்த மக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தியிருந்த யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள், வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.

கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து 480 ஏக்கருக்கு மேலான மக்களின் நிலங்களில் 10க்கும் மேற்பட்ட பிரதான படைப்பிரிவுகளுடன்ட பல படைமுகாம்களை அமைத்துள்ள சிறிலங்கா படைத்தரப்பு, அங்கு உணவு விடுதிகளையும், உல்லாச பொழுதுபோக்கு தளங்களையும் நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3/18/2017 3:56:37 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்