Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

துறைமுகப்பகுதி  போன்று ஏனைய பகு­தி­க­ளை விடு­விக்­க மயிலிட்டியில் கவ­ன­யீர்ப்பு போராட்டம்!

<p>துறைமுகப்பகுதி  போன்று ஏனைய பகு­தி­க­ளை விடு­விக்­க மயிலிட்டியில் கவ­ன­யீர்ப்பு போராட்டம்!</p>

மயிலிட்டித் துறைமுகப்பகுதி விடுவிக்கப்படுவது போன்று ஏனைய பகு­தி­க­ளை யும் விடு­விக்­கக்­கோரி மயி­லிட்டி துறை­மு­கத்­திற்கு முன்னால் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக  வலி.வடக்கு மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு சங்கத் தலைவர் அ.குண­பா­ல­சிங்கம்  தெரிவித்துள்ளார்.

இக் கவனயீர்ப்புப் போராட்டம் திங்கட்கிழமை (03.07.2017) காலை 9 மணிக்கு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யுத்தம் கார­ண­மாக குறிப்­பாக 1990 ஆம் ஆண்டு இடப்­பெ­யர்­வுக்கு பின்னர்  27 ஆண்­டுகள் கடந்த நிலையில் பலத்த எதிர்­பார்ப்பின் மத்­தியில் திங்­கட்­கி­ழமை காலை 9 மணிக்கு  இரா­ணு­வத்­தினர் மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கத்­தையும் அதனை சூழ­வுள்ள 54 ஏக்கர் மக்கள் குடி­யி­ருப்பு காணி­க­ளையும் விடு­வித்து யாழ்.மாவட்ட அரச அதி­ப­ரிடம்  ஒப்­ப­டைக்­க­வுள்­ளனர். 

இதே­வேளை ஏனைய விடு­விக்­கப்­ப­டா­துள்ள காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கவ­ன­யீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளதால் அன்­றைய தினம் இடம்­பெ­யர்ந்து வாழும் மயி­லிட்டி மக்­க­ளையும் நலன்­பு­ரி­நி­லை­யங்­களில் தங்­கி­யுள்ள மக்­க­ளையும் தவ­றாது கலந்­து­கொள்­ளு­மாறு அவர் வேண்­டுகோள்  விடுத்­துள்ளார்.

7/2/2017 10:35:54 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்