Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அரசாங்கம் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்கள் ஆதங்கம்!

அரசாங்கம் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்கள் ஆதங்கம்!கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்டோரில் வெளிப்படுத்தல்களை வலியுறுத்தி இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தாமை குறித்து மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனை வெளிப்படுத்தும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கறுப்பு நிற ஆடை மற்றும் கறுப்பு பட்டியை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் நேற்று 54ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இதுவரையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒருவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அதேபோன்று வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதும், சிறிலங்கா அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தாதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

4/15/2017 12:29:33 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்