Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது! ஓவியர் வீரசந்தானம் மறைவுக்கு வைகோ, சீமான் இரங்கல்!!

<p>தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது! ஓவியர் வீரசந்தானம் மறைவுக்கு வைகோ, சீமான் இரங்கல்!!</p>

 

தமிழ் இன விடுதலைக்காக வாழ்ந்த அந்த ஒளிச்சுடர் அணைந்துவிட்டது. அவரது இதய தாகமான இலட்சியங்களை நெஞ்சில் ஏந்துவோம்!

எனது ஆருயிர்ச் சகோதரன் ஓவியர் வீரசந்தானத்திற்கு வீர வணக்கத்தையும், பொங்கி வரும் கண்ணீரையும் அஞ்சலி ஆக்குகிறேன் என ஓவியர் வீர சந்தானம் மறைவு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீரசந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது! 43 ஆண்டுகளாக தன் வாழ்வையே சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்காகவே அர்ப்பணித்தவர்.

நான் நெஞ்சால் பூசிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் எல்லையற்ற அன்பையும், மதிப்பையும் பெற்று அவருடன் உயிராகப் பழகியவர் நமது இலட்சிய ஓவியர்.

அதற்கான அனைத்து அறப்போராட்டங்களிலும் முன்நின்றவர். உடல் நலிந்த நிலையிலும் தமிழ்க்குலத்துக்காக வீர முழக்கம் எழுப்பியவர்.

தலைசிறந்த ஓவியர். ஆனால் அவர் கரம் பற்றிய தூரிகை தமிழின விடுதலைக்காகவே ஓவியங்களைத் தீட்டியது. முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு உயிரோவியங்களை வரைந்தார்.

நேற்று முன்தினம் காலையில் நெடுநேரம் என்னிடம் அலைபேசியில் உரையாடினார். அவரது மறைவு தமிழ் இனத்துக்கும், தமிழ் ஈழ மக்களுக்கும் ஈடு செய்யவே முடியாத இழப்பாகும்.

தமிழ் இன விடுதலைக்காக வாழ்ந்த அந்த ஒளிச்சுடர் அணைந்துவிட்டது. அவரது இதய தாகமான இலட்சியங்களை நெஞ்சில் ஏந்துவோம்!

எனது ஆருயிர்ச் சகோதரன் ஓவியர் வீரசந்தானத்திற்கு வீர வணக்கத்தையும், பொங்கி வரும் கண்ணீரையும் அஞ்சலி ஆக்குகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாh.

ஓவியர் வீர.சந்தானம் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (14-07-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த்தேசிய இனப் போராட்ட வரலாற்றில் தனது அளப்பரிய இனமான உணர்ச்சியால் தமிழினம் செழிக்கத் தளராமல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்ற தூரிகைப்போராளி எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் காலமான துயரச்செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன். தனிப்பட்ட அளவில் எம் மீது பேரன்பும், பெருநம்பிக்கையும் கொண்டிருந்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் மறைவு எனது வாழ்வில் நான் அடைந்துள்ள பேரிழப்பாகும்.

தமிழின் செழுமையான ஓவிய வகைப்பாட்டில் நவீன ஓவியத் தொடர்ச்சிக்கும், மரபுசார் ஓவிய முறைமைக்கும் இடையே பாலமாய்த் திகழ்ந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய தகைமையாளர் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள். ஈழ அழிவின் உதிரக் காட்சிகள் சிற்பங்களாய் உறைந்திருக்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் பங்கு எதனாலும் ஒப்பிட முடியாதது. காண்போர் கண்களைக் கலங்கச்செய்யும் முள்ளிவாய்க்கால் முற்றச் சிற்பங்கள் காலங்காலமாய் நம் இனத்தின் அழிவை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பது போலவே தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் கலைமேன்மையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தமிழின் ஆகச்சிறந்த ஓவியராக முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாது, தமிழின நலன் சார்ந்த எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அழைப்போ, அழைப்பில்லையோ முதல் ஆளாக முன்வரிசையில் வந்து முழக்கங்கள் இட்ட இந்தப் போராட்டக்காரன் போல வேறு இன்னொருவரைத் தமிழின வரலாற்றில் காண முடியாது. என்னை எங்குப் பார்த்தாலும் அன்பொழுக நோக்கிய அந்தக் கண்கள், என்னை ஆரத் தழுவி அரவணைத்து மாசற்ற அன்பை மழைபோலக் கொட்டிய அந்த இதயம், எப்போதும் என் தோள்களில் தழுவி என்னைத் தட்டிக் கொண்டே இருந்த அந்தக் கரங்கள், நம்பிக்கையுடன் என்னை நகர்த்திக் கொண்டே இருந்த அந்தச் சொற்கள் இவைகளையெல்லாம் இனி நான் எங்குக் காண்பேன் என்கின்ற துயரம் இதயத்தில் முள்ளாய் உறுத்துகிறது.

தூரிகைப்போராளியே! எந்த நோக்கத்திற்காக உனது கால்கள் களைப்படையாமல் அலைந்ததோ, எந்த இலட்சியத்திற்காக உனது இதயம் சலிப்படையாமல் துடித்ததோ, எந்தப் புனித நோக்கத்திற்காக உனது குரல் புரட்சி முழக்கங்களாய் வெடித்ததோ, எந்த இலக்கிற்காக உனது தூரிகை உதிரச்சொட்டுகள் நிறைந்த ஓவியங்களாய் வடித்ததோ அந்தப் புனிதக்கனவு நிறைவேறும்வரை எங்களது விழிகள் உறங்காது. இந்தப் புவியுள்ளவரை, எம் மொழியுள்ளவரை உனது புகழ் ஒருபோதும் மறையாது! மறையாது! ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்குப் பெருக்கெடுக்கும் கண்ணீரோடு நாம் தமிழரின் புகழ் வணக்கம்!

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7/14/2017 5:30:21 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்