Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பாக்கியசோதிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் மேற்குலகின் சதித் திட்டம்! - மகிந்த கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல்!!

பாக்கியசோதிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் மேற்குலகின் சதித் திட்டம்! - மகிந்த கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல்!!



மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலானது மேற்குலக நாடுகளின் சதித் திட்டம் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றீனால் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியிடப்பட்டு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய தகவல் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் தொடர்பில் பாக்கியசோதி சரவணமுத்து வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அவருக்கு கடதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் முனைப்புக்களில் பாக்கியசோதி சரவணமுத்து  தொடர்ந்து ஈடுபட்டால், அவரை கொலை செய்யப் போவதாக இக்கடிதத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இக்கடிதத்தை பாக்கியசோதி சரவணமுத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்தக் கொலை மிரட்டல் தொடர்பில் விசாரணை செய்யுமாறு 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வெளிநாட்டு சக்திகளும், அதன் உள்நாட்டு ஆதரவாளர்களும் இணைந்து நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருவதாக சிறிலங்கா ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

1/2/2013 1:49:53 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்