Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அதிகருத்துவரும் அரசியல் நெருக்கடிக்குள் மகிந்த அரசு – அமைச்சரவை மாற்றத்தை பிற்போட முடிவு?

அதிகருத்துவரும் அரசியல் நெருக்கடிக்குள் மகிந்த அரசு – அமைச்சரவை மாற்றத்தை பிற்போட முடிவு?

 

இவ்வருட முற்பகுதியில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் எனக் கருத்துகள் வெளியிடப்பட்டுவந்தபோதும் தற்போதைக்கு அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருக்க சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.

அரசியல் களத்தில் அரசு, பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்ற நிலையில், அமைச்சரவை மாற்றங்களை மேற்கொண்டால் அது ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளிடையே கசப்பான மனவுணர்வுகளைத் தோற்றுவிக்கும். அத்துடன், இந்த இறுக்கமான சூழ்நிலையில் இது அரசுக்கு பெரும் சவாலான நிலைமைகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி மஹிந்த மேற்படி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விவகாரத்தால் நிறைவேற்று, நீதி, சட்டவாக்கம் ஆகிய மூன்று துறைகளுக்குமிடையில் முரண்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறுபட்ட தரப்புகளிலிருந்தும் ஆளுந்தரப்புக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் பிரதம நீதியரசரின் குற்றவியல் பிரேரணை விவகாரத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சையுடன் கூடிய குழப்பகரமான நிலைமைக்கு தீர்வொன்றைக் கண்டதன் பின்னரே அமைச்சரவையில் மாற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருட முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்களும் வரவிருப்பதால், அமைச்சரவை மாற்றத்தை உடனடியாக செய்வது அனுகூலமற்றதென அரசு கருதுவதாகவும் தெரியவருகின்றது.

1/1/2013 1:16:51 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்