Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முள்ளிவாய்க்கால் அவலம் - தமிழ் கூட்டுணர்வின் அடையாளம் - யதீந்திரா

முள்ளிவாய்க்கால் அவலம் - தமிழ் கூட்டுணர்வின் அடையாளம் - யதீந்திரா

 

எரிக்கப்பட்ட காடு நாம்.

ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது

எஞ்சிய வேர்களில் இருந்து.

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்

தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்

இல்லம் மீழ்தலாய்

மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்

சுதந்திர விருப்பாய்

தொடரும்மெம் பாடல்

-          வ.ஜ.ச.ஜெயபாலன் 

இது போன்றதொரு மே மாதத்தில்தான் அனைத்தும் நடந்து முடிந்தன. இத்தீவின் நீதி என்பது தமிழரின் குருதியில் மூழ்க்கிப்போனது. மூழ்கிப்போன அந்த நீதியை மீளவும் இத்தீவில் நிமிர்ந்தெழச் செய்யலாமா? - இப்படியொரு கேள்வியுடன் எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த எட்டு ஆண்டுகளில் இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு வெளியிலும் இது தொடர்பில் ஏராளமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களுக்கான நீதி என்பது மட்டும் இப்போதும் கூட ஊசலாடும் ஒன்றாகவே இருக்கிறது.

நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும் உனது வாழ்நாளாகும். இதனை இலங்கைத் தீவின் நீதியுடன் தொடர்புபடுத்திச் சிந்திப்பதானால் அதன் பொருள் வேறு - இங்கு கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டுகளும் தமிழர்களுக்கான நீதியை மறுதலிப்பது எவ்வாறென்று ஆராயும் ஆண்டுகளாகவே கழிந்திருக்கின்றன. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான இந்த எட்டு ஆண்டுகளில் அநீதிக்கு தாலாட்டுப் பாடுவதில் ஆட்சியாளர்களுக்கிடையில் எந்தவொரு வேறுபாடும் இருந்திருக்கவில்லை. எப்படிப் பாடுவது என்பதில்தான் அவர்கள் வேறுபடுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில்தான் முள்ளிவாய்க்கால் அவலத்தின் எட்டாவது ஆண்டை நாம் நினைவு கூர்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் அவலத்தை ஏன் நாம் நினைவுகூர வேண்டும்? ஒப்பாரி வைப்பதற்காகவா? வீழ்ந்துபோனவர்களை எண்ணி கண்கசியவா? இதற்கு காரணமானவர்கள் என்போரை திட்டித் தீர்க்கவா? உலகத்தை எண்ணி கவலைகொள்ளவா? உண்மையில் இவைகள் எதற்காவும் அல்ல!

முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தை சந்தித்த முதல் மக்கள் கூட்டம் நாமல்ல. நமக்கு முன்னரே முள்ளிவாய்க்காலை விடவும் மோசமான அவலங்கள் இவ்வுலகின் சில பாகங்களில் நடந்தேறியிருக்கின்றன. குவாட்டமாலா உள்நாட்டு யுத்தத்தின்போது (Genocide in Guatemala) 1981 – 1983 வரையில் அந்நாட்டின் மாயன் பழங்குடி மக்கள் இரண்டு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1994இல், நவீன ஜனநாயக உலகமே வெட்கித் தலைகுனியும் வகையில், ஒரு சிறிய ஆபிரிக்க நாடான றுவாண்டா குருதியில் நனைந்தது. 100 நாட்களில் 8 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நவீன உலகின் மிக மோசமான இனப்படுகொலையொன்று ஜ.நா அமைதிப்படையின் முன்னிலையிலேயே நடந்தேறியது. அப்போது ஜ.நாவின் றுவாண்டா இலக்கிற்கு (UN mission in Rwanda) பொறுப்பாக இருந்தவர் கனடிய இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோமியோ டலாரி. இவர் பின்னர் தனது அனுபவங்களை தொகுத்து பிசாசுடன் கைகைளை குலுக்கிக் கொள்ளுதல் (Shake Hands with the Devil) என்னும் தலைப்பில் நூலொன்றையும் எழுதியிருந்தார். இந்தப் பின்தங்கிய, கறுப்பின அப்பாவி மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்னும் குற்றவுணர்விற்கு ஆளான அவர், உலகம் நினைத்திருந்தால் அந்த மக்களை காப்பாற்றியிருக்க முடியுமென்னும் உண்மையை போட்டுடைத்தார். நீண்ட காலத்திற்கு பின்னர்தான் மேற்படி இனப்படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் அவலம் என்பது எங்களுக்கானது. ஆனால் இதனையும் விடவும் கொடூரங்களை இவ்வுலக வரலாறு ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றது.

இதிலிருந்து நாம் ஒரு உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். நமக்காக நாம் செயற்படாவிட்டால், நமக்காக நாம் ஒன்றுபடாவிட்டால், நமக்காக நாம் சிந்திக்காதுவிட்டால் - நாம் முன்நோக்கிப் பயணிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் அவலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம் இதுதான். ஏனெனில் உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் போதுதானே இந்த அவலம் நடந்தேறியது. இப்போது அந்த உலகத்திடம்தான் நாம் முறையிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உலகம் இந்த விடயத்தில் தலையிட வேண்டுமென்று கோருகின்றோம். எனவே நமக்கு ஒன்று விளங்குகின்றது. அதாவது, இந்த உலகத்திடம்தான் தீர்வுண்டு. ஆனால், அந்தத் தீர்வு நாம், நமக்காக இயங்காதுவிட்டால் ஒரு போதுமே கிடைக்காது. இந்த பின்னணியில்தான் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர்வதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முள்ளிவாய்க்காலை நாம் நினைவு கூர்வதென்பது, நமக்கு நடந்துமுடிந்த ஒரு அநீதியை நினைவு கூர்வதுடன் முடிவடைந்துவிடும் ஒன்றல்ல. மாறாக, நாம் எதையும் மறக்கவில்லை என்பதுடன் எமக்கான நீதியை எவரிடமும் நாம் தாரைவார்க்கத் தயாரில்லை என்பதையும் உலகிற்கு உரத்துச் சொல்லும் ஒரு தினம். அதன் மூலமாகத்தான் நாம் ஒரு தேசமாக இத்தீவில் இருக்கின்றோம் என்பதை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் அவலம் என்பது வெறுமனே முள்ளிவாய்க்காலில் வீழ்ந்துபோனவர்களின் நினைவுகள் மட்டுமல்ல. அது கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக தனது உரிமைகளுக்காக போராடிவரும் ஒரு தேசத்தினது கூட்டுணர்வின் அடையாளமாகும். புலத்தையும் களத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு அரசியல் பதம். காலமுள்ளவரை முள்ளிவாய்க்கால் உணர்வு தமிழ் தலைமுறைகளை தொட்டுச் செல்ல வேண்டும். அது ஒரு தமிழ் கூட்டுணர்வின் அடையாளமாக மாற வேண்டும். அதற்கான கட்டமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் கூட்டுணர்வின் அடையாளமாகும். முள்ளிவாய்க்காலை நினைகூரல் என்பது, தமிழ் பரப்பிற்குள் பரவிக் கிடக்கும் அரசியல் வேறுபாடுகள், கருத்தியல் பேதங்கள், தலைமைத்துவ போட்டிகள் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். ஏனெனில் முள்ளிவாய்க்காலை நினைவுகூரல் என்பது நம்மை முன்நோக்கி உந்தித்தள்ளும் ஒரு ஆத்ம பலமாகும். 

முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலை முன்னிறுத்தி, திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக எழுதப்பட்ட கட்டுரை

5/20/2017 11:57:58 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்