Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப் பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்! 

<p>புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப் பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்! </p>

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் சமஷ்டியின் அம்சங்கள் இருக்கும் எனவும்  சிலர் சொல்கிறார்கள். அது பொய் எனவே ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படாமல் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு கூறியிருக்கிறார்

இச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாது, வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாது, சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாது புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும்

ஒற்றையாட்சி, சமஷ்டி என்னும் பெயர் பலகைகள், கோஷங்கள் தேவையில்லை என்ற கருத்தை சிலர் தமிழ் மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார்கள். ஆனால் 65 வருடங்களாக சிங்கள பௌத்த சிந்தனைக்குள் மூழ்கி கிடக்கும் இலங்கையின் நீதித்துறை மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் நிலை நிச்சயமாக உருவாக்கப்படும்.

. இலங்கையின் முதலாவது அரசியலமைப்பே ஒற்றையாட்சியையே சுட்டுகின்றது. அதற்கு வியாக்கியானம் செய்தது நீதி மன்றமே. மேலும் இலங்கையை பொறுத்தமட்டில் ஒரு நாடு என்றவகையில் ஒற்றையாட்சி என்பதே நிலைப்பாடு. அதனையே 65 வருடங்களாக சிங்கள பௌத்த சிந்தனைக்குள் மூழ்கி கிடக்கும் இலங்கையின் நீதித்துறை தமிழ் மக்களை நிச்சயமாக ஏமாற்றும். 

மேலும் சமஷ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் சமஷ்டியின் அம்சங்கள் இருக்கும் எனவும்  சிலர் சொல்கிறார்கள். அது பொய் எனவே ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படாமல் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும். இதற்கு உதாரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடகிழக்கு ம hகாணங்கள் இணைக்கப்படும் எனவும் அதற்காக முதலில் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவ்வாறான ஒன்று நடக்கவேயில்லை. அதற் கும் பின்னர் 18, 19 வருடங்களின் பின்னர் நீதிமன்றம் ஊடாகவே வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டது. 

எனவே நீதிமன்ற வியாக்கியானங்களை நாங்கள் நம்ப இயலாது. 65 வருடங்களுக்கு பின் நாம் மீண்டும் ஏமாற்றப்படலாம். அதற்கு நாம் இடமளிக்க கூடாது. இதேபோல் சமஷ்டி என்றால் மாகாணங்களுக்க பகிரப்படும் அதிகாரத்தில் மத்தி தலையிட கூடாது என்பதும், மாகாணங்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை மீள பெற கூடாது என்பதும் அல்ல. 

மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டு மத்தியில் கூட்டாட்சி அi மயவேண்டும். அதாவது மாகாணங்கள் இன அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தால் அந்த மாநிலத்தின் கருத்துக்கள் மத்தியில் இடம்பெறவேண்டும். என்பதுடன் 2ம் நிலை சபை அல்லது செனட் சபை ஒன்று ம் ஆரம்பிக்கப்படவேண்டும். 

அதேவேளை செனட் சபை ஒன்று அல்லது 2 ஆம் நிலை சபை இருப்பதனால் அது சமஷ்டி ஆகவும் இயலாது. உதாரணமாக சோல்பெரி அரசியலமைப்பில் செனட் அல்லது 2ம் நிலை சபை இருந்தது. ஆனால் அது ஒற்றையாட்சியை வலியுறு த்துகின்றது என்பதுடன் அது இனப்பிரச்சினைக்கு காரணமாகவும் அமைந்தது.

எனவே தமிழ்தேசம் அ ங்கீகரிக்கப்பட்டு, வடகிழக்கு இணைக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி என்ற சொல் குறிப்பிடப்படாத புதிய அரசியலமைப்பு சட்டம் வருமாக இருந்தால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

7/4/2017 4:14:20 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்