Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கம் – சிறிலங்கா அதிபர்

நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கம் – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடன் இருந்தால், நாளைக்கே கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்தால், தாமும் இணைந்து கொள்ளத் தயார் என்று, புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நான் அவர்களுக்குக் கூறுகிறேன், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து என்னுடன் நில்லுங்கள்.

நாளைக்கே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கிறேன். நாளை காலையே எனது இல்லத்துக்கு வாருங்கள். 96 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எவ்வாறு ஒரு அரசாங்கத்தை அமைப்பது என்று உங்களுக்கு காண்பிக்கிறேன்.

மிகின் லங்கா, சிறிலங்கன் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு அடுத்தவாரம் நியமிக்கப்படும்.

அதன் மூலம் மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

1/27/2018 7:28:13 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்