Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மு.திருநாவுக்கரசு அவர்களின் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» ஓர் அறிமுகம்! - கலாநிதி சர்வேந்திரா

<p>மு.திருநாவுக்கரசு அவர்களின் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» ஓர் அறிமுகம்! - கலாநிதி சர்வேந்திரா</p>

 

ஈழத் தமிழர் தேசத்தின் மூத்த அரசியல் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்கள் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» எனும் நூலை எழுதியிருக்கிறார். 500க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான ஆய்வு நூல் இது. இந் நாலின் வெளியீடு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகமாகவே இப் பத்தி எழுதப்படுகிறது.

இந் நூல் அறிமுகத்துக்குச் செல்லுமுன்னர் இந்நூலாசிரியர் பற்றி சில வார்த்தைகளைக் குறிப்பிடுவது அவசியம். அறிவியலை ஆழமாக விசுவாசிக்கும் மு.திருநாவுக்கரசு அவர்கள், தமிழ் மக்களின் தேசிய, சமூக விடுதலைக்கான போராட்டம் பற்றியும், அதன் புவிசார், அனைத்துலகப் பரிமாணங்கள் பற்றியும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசியும் எழுதியும் வருபவர். ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அறிவுத் தளத்தில் இவரது பங்களிப்பு பாரியது. இவரது கருத்துகளும் எதிர்வுகூறல்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவனத்துக்கெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஈழத் தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் ஓர் அவலமான சூழ்நிலை தவிர்க்கப்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. தான் தெரிவிக்கும் கருத்துகள் சில சமங்களில் உவப்பில்லாமல் இருந்தாலும் அதனைத் தெரிவிக்க வேண்டிய அறிவியல் நேர்மையை கடைப்பிடித்து அதனை உரிய இடங்களில் மு.திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்தே வந்திருக்கிறார். இந்த அறிவியல் நேர்மையுடன்தான் தனது வரலாற்றுக் கடமையாகக் கருதியே அவர் இந் நூலை எழுதியுள்ளார்.

இந் நூல் பேசமுனையும் உட்கருப்பொளையும் இதனை எழுதுவதற்கு உந்துசக்தியாக அமைந்த அரசியற்சூழலையும் நூலாசிரியர் தனது மொழியில் பின்வருமாறு விபரிக்கிறார். இந்த விபரிப்பே இந் நூல் ஆக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்திவிடுகிறது. இனவழிப்புச் சூழலை எதிர்கொள்ளும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொண்டு மீண்டுவருவதற்கான அறிவியல் அறைகூவலாகவும், ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்குத் தூண்டும் ஒரு வழிகாட்டியாகவும் இந் நூலை நோக்க முடியும். நூலாசிரியர் கூறுகிறார்.

«மனித வரலாறெங்கிலும் விரவிக் கிடக்கும் தர்மம்-அதர்மம், நீதி-அநீதி, நியாயம்-அநியாயம், பொறுப்புணர்வு-அலட்சியம், பற்றுறுதி-விசமத்தனம், மனிதத்துவம்-மிருகச்செயல்கள் என்பனவற்றை வரலாற்றுப் போக்கில் தொடர்வண்டிப் பாதையென இந்நூல் கோடு கீறிச் செல்கிறது.

இந்நூல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான யுத்தத்தின் சுவாலைகளை மக்களின் நெஞ்சங்களில் பதியவைத்து உன்னதங்களை கனியவைக்க முயல்கிறது. தர்மத்தின் குரலாயும், அடிபணிய மறுக்கும் விடுதலைகளுக்கான ஒளிக்கீற்றுக்களாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடாய் உள்ளது.

<p>மு.திருநாவுக்கரசு அவர்களின் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» ஓர் அறிமுகம்! - கலாநிதி சர்வேந்திரா</p>

முள்ளிவாய்க்கால் பெருந்துயரமே இந்நூலை எழுதுமாறு எனக்கு ஆணையிட்ட ஆசானாகும். முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் வாடா மலர்கள் பூக்கும். வசந்தங்கள் பிறக்கும். ஒரு புதிய நாகரிகத்திற்கான தொட்டிலாக முள்ளிவாய்க்கால் உலைக்களத்தை கையில் ஏந்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழிச்சிக்கும், புதல்வனுக்கும், புதல்விக்கும், உலகந் தழுவிய அனைத்து உன்னத மனிதர்களுக்கும் உண்டு»

இந் நூலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றூக அமைவது மேலைத்தேய சிந்தனைமுறை பற்றிய அறிவுடனும் கீழைத்தேய சிந்தனைபற்றிய புரிதலுடனும் இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகும். இத்தகைய அணுகுமுறை பல எழுத்தாளர்களிடமும் அறிஞர்களிடமும் காணப்படுவதில்லை. இவ் இரண்டு சிந்தனைமுறைகளையும் கவனத்திற் கொண்டு பல்வேறு கோட்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும் இந்நூல் வழங்கிச் செல்கிறது. இதில் குறிப்பிடக்கூடியதொரு விடயம் தேசியவாதத்துக்கும் இனவழிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். தேசியவாதம் எவ்வாறு முகிழ்த்தெழுகிறது என்பதனைப் பொறுத்து அதன் நல்ல விளைவுகளும் தீய விளைவுகளும் அமையப் பெறும். யூதர்களை «கலாசார சிதைப்பாளர்கள்» என்று கூறி கூண்டோடு அழிக்க முயன்ற கிட்லரின் தேசியவாதத்தை இராட்சச தேசிய வாதம் (monster nationalism) என வகைப்படுத்தும் இந்நூல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு காரணமாக அமைவது சிங்களத் தேசியவாதம் «இராட்சச தேசியவாதமாக» வடிவெடுத்தமையே என அடையளாம் காண்கிறது.

பூகோளவாதம் (Globalism) என்பது ஒரு ஒரு சிந்தனைக் கோட்பாடு. இக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்துதான் உலகமயமாக்கல் (Globalization) என்ற நடைமுறை தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இந் நூல் பூகோளவாதத்தின் அடிப்படைகளை பூமியின் தோற்றம், நவீன மனிதனின் தோற்றம், மனிதப்பரம்பலால் பூகோளம் இணைந்த முறை போன்ற நடைமுறைகளின் ஊடாக அடையாளம் கண்டு, பூகோளவாதத்தின் உட்கூறுகளைப் பற்றி அலசுகிறது.  காலனித்துவத்தால் வளர்ந்த உலகமயமாக்கல் பற்றியும் மதங்கள் உலகமயமாகியமை பற்றியும் அலசிச் செல்லும் இந் நூல் பூகோளவாதச் சிந்தனைமுறையின் அடிப்டைகளை தெளிவாக முன்வைக்கிறது.

சர்வதேசவாதம (Internationalism) என்பது உலகில் அரசுகள் தமக்கிடையிலிலான தொடர்புகளையும் உறவுகளையும் பேணிக்கோள்ளும் நடைமுறை தொடர்பான கோட்பாடுகளைக் கொண்டு வளர்ந்த ஓர் சிந்தனைமுறையாகும். அரசுகளுக்கிடையோன உறவுகளில் போர், வர்த்தகம், கூட்டுறவு போன்றவை முக்கியம் வாய்ந்தவை. ஆரம்பத்தில் சர்வதேசவாதமும் நாடுகடந்தவாதமும் (Transnationalism) வேறுபடுத்தப்படாத நிலை இருந்தபோதும் தற்போதய ஆய்வாளர்களில் பலர் சர்வதேசவாதத்தை அரசுகளுடனும் நாடுகடந்தவாதத்தை அரசுகள் அல்லாத மக்கள் சார்ந்த உறவுமுறையுடனும் இணைத்துச் சந்திப்பதைக் காண முடிகிறது.

மு.திருநாவுக்கரசு அவர்களின் நூலின் முக்கிய இழையாக இருப்பது பூகோளவாதம், சர்வதேசவாதம், தேசியவாதம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பாகும். பூகோளவாதத்தையும் சர்வதேசவாதத்தையும் இணைக்கும் இழையாக புதிய தேசியவாதத்தை நூல் ஆசிரியர் நோக்குகிறார். இது சுவாரசியமானதொரு சந்திப்புப் புள்ளியாகும்.

சந்தை மற்றும் வர்த்தக வளர்ச்சி, தனியார் மூலதன வளர்ச்சி, தொழில்நுட்ட வளர்ச்சி போன்றவை பூகோளவாதத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பது சமூக விஞ்ஞானிகளால் பரவலாக விவாதிக்கப்படும் ஒரு பேசுபொருளாகும். இவற்றின் வளர்ச்சி அரசுகளின் பாத்திரத்தில் எத்தகைய தாக்கத்தை எற்படுத்தியிருக்கின்றன, ஏற்படுத்தப் போகின்றன என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன. தற்போதய பூகோளமயமாகும் உலக ஓழுங்கில் தேசியவாத்தின் நிலை என்பது குறித்தும் தீவிரமான விவாதங்கள் நடைபெறுகின்றன. இப் பின்னணியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது நூலில் தேசியவாதம் குறித்து விரிவாக விவாதித்து, பூகோளவாதம், சர்வதேசவாதம், தேசியவாதம் ஆகியவற்றுக்கிடை யேயான தொடர்புகளை இனம் காண்கிறார். தற்போதய புதிய உலக ஒழுங்கில் தேசியவாதம் அடைந்திருக்கும் கட்டத்தை அவர் புதிய தேசியவாதம் என வரையறுக்கிறார். பூகோளவாதத்தின் வளர்ச்சி தேசியவாதத்தை வலுவிழக்கச் செய்யும் என்ற பலரது எதிர்வு கூறல்கள் தவறாகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில், தேசியவாதம் வலுவிழந்து போகவில்லை, மாறாக ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது என நூலாசிரியர் அடையாளம் காண்பதை தேசியவாதம் குறித்த சிந்தனைமுறைக்கு வழங்கப்பட்டதொரு பங்களிப்பாக நோக்க முடியும்.

உலகப்பார்வையுடன் எழுதப்பட்ட இந்நூல் இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாகவும் ஆழமாக வாதிக்கிறது. பூகோளவாதம், சர்வதேசவாதம் இவற்றை இணைத்து நிற்கும் புதிய தேசியவாதம் போன்றவையூடாகத் தோற்றம் பெற்றிருக்கும் புவிசார் மற்றும் பூகோள உறவுகளால் பின்னப்பட்டிருக்கும் சிலந்திவலையின் ஓரங்கமாக இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் இருக்கிறது இந் நூல் உணர்த்துகிறது.

அறிவுசார் அரசியலை முன்னெடுக்க விரும்பும் அனைவரும் இந் நூலைத் தவறாது படிப்பது பயனுள்ளதாகும்.

3/3/2018 1:18:15 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்