Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம் -- சுமந்திரன்

கூட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம் -- சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்புவோர் வெளியேறலாம் என்று தெரிவித்திருக்கின்றார் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறப் போவதான செய்திகள் தொடர்பில் ஊடவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். கூட்டமைப்பிலிருந்து எவரும் வெளியேறலாம் அது அவர்களின் தெரிவு என்று தெரிவித்திருக்கும் சுமந்திரன்

எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமிழரசு கட்சியால் ஒதுக்கப்படும் ஆசனங்களை பெற்றுக் கொண்டு போட்டியிட முடியும். மன்னாரில் டெலோவிற்கு ஒரு இடம் வழங்கப்படும். அது தவிர வடக்கில் எந்தவொரு இடத்திலும் ஏனைய கட்சிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ளுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

 

11/3/2017 1:14:15 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்