Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் ராஜிதவிடம் கையளிக்க ஏற்பாடு!

<p>வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் ராஜிதவிடம் கையளிக்க ஏற்பாடு!</p>



வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேர் தொடர்பில் அவர்களது உறவினர்களால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் எதிர்வரும் 27ஆம் திகதி சுகாதார அமைச்சின் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

இதன்போது, இந்த விபரங்களை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் கையளிக்கவுள்ளார்.

வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை கடந்த 2ஆம் திகதி நேரில் சந்தித்த சிறிலங்கா சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, குறித்த விபரங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த விபரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் இன்று 58ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4/22/2017 5:31:23 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்