Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காணிகளை விடுவிப்பதாக தேர்தலின் போது மைத்திரிபால உறுதியளித்தார்! - சுமந்திரன்

<p>காணிகளை விடுவிப்பதாக தேர்தலின் போது மைத்திரிபால உறுதியளித்தார்! - சுமந்திரன்</p>வடக்குக் கிழக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட தனியார் காணிகளை விடுவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் உறுதி அளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே, சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மைத்திரிபால சிறிசேனவின் இந்த உறுதிமொழிக்கு அமையவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படடதாகவும் சுமந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, வலி.வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்திருப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கத்தைக் காரணம் காட்டி இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படைத்தரப்பு மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4/22/2017 5:26:05 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்