Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நோர்வேத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் பாடசாலை மாணவர்களுக்கான தொழில்நுட்ப விழிப்புணர்வுக் கருத்தரங்கு

நோர்வேத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் பாடசாலை மாணவர்களுக்கான தொழில்நுட்ப விழிப்புணர்வுக் கருத்தரங்கு

 

மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்திற்கும் யாழ் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞான சங்கங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களிடையே தூய சக்தி தொழில்நுட்ப விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் மார்ச் 6 முதல் 14ம் திகதிவரை இடம்பெறவுள்ள இவ் விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் 3500 உயர்தர வகுப்பு மாணவர்கள் பங்கபெறவுள்ளனர் எனவும் இச் செயற்திட்டம் வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடந்தவருடம் யாழ் மாவட்டத்தில் கற்பிக்கும் 70 விஞ்ஞான தொழில்நுட்ப ஆசிரியர்களும் யாழ் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். கடந்தவருடம் பயிற்சிபெற்ற இவ் ஆசிரியர்களே அடுத்தவாரம் இடம்பெறவுள்ள தூயசக்தி தொழில்நுட்பம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

வளர்ந்துவரும் விஞ்ஞான உலகிலே தூய சக்தி முதல்களின் பாவனையையும் அவற்றின் தேவையையும் இன்றைய எம் பாடசாலை மாணவர்கள் அறிந்திருக்கவேண்டியது மிகவும் அவசியமானதொன்று. இதனைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம், வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து யாழ் மற்றும் மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகங்களின் (Western Norway University of Applied Sciences) அனுசரணையுடன், வடமாகாண 1AB  பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 8 முதல் 11 மற்றும் க.பொ.த (உ/த) விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத் துறைசார்ந்த மாணவர்களுக்குத் தூயசக்தி தொழிநுட்பம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மார்ச் 6 முதல் 14 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பாடசாலைகளில் 10 செயலமர்வுகளாக இக்கருத்தரங்கானது நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 70 மாணவர்களின் பங்களிப்புடன் ஏறத்தாழ 3500 மாணவர்கள் இக்கருத்தரங்கில் பயன்பெறவுள்ளனர்.

இக்கருத்தரங்கிற்கான வளவாளர்கள் ஏலவே யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடந்த பயிற்சியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இம் மாணவர் கருத்தரங்கானது தூயசக்தி தொழிநுட்பம் தொடர்பான விரிவுரைகள், காணொளி விளக்கங்கள், உபகரணங்களூடான செய்முறை விளக்கங்கள், மற்றும் உபகரணக் கையாள்கையூடான கற்றல் விளக்கங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

இக்கருத்தரங்கின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கிடையில் இதுவிடயம் சார்ந்த பல்தேர்வுப் போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதுதவிர பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபெறும் மாணவர்களுக்கு தூயசக்தித் தொழிநுட்பங்கள் தொடர்பான சுவரொட்டி, ஆவணப்படமாக்கல், மற்றும் கண்காட்சிப் பொருளமைத்தல் போன்ற போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் மே மாதத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அதேவேளை அன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள துறைசார் வல்லுனர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படுமென்பது இங்கே சுட்டிக்காட்டவேண்டியதொரு விடயமாகும்.  

இச்செயற்பாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் யாழ் மாவட்டத்தின் ஏனைய வலயங்களை உள்ளடக்கி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தினர், வடமாகாணக் கல்வித்திணைக்களத்துடனும், யாழ் மற்றும் மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள். இச்செயற்றிட்டம் இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் நிதியுதவியின் கீழ் நடாத்தப்படுவதென்பது இங்கே குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய விடயமாகும். 

3/3/2018 12:53:03 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்