Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம் - அரசியல் ஆய்வாளர் யதீந்திரா

<p>அரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம் - அரசியல் ஆய்வாளர் யதீந்திரா</p>

 

அரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது அவசியம். மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவது மிகவும் மோசமானது. ஒரு நிலைப்பாட்டை கைவிடுவது பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஆனால் அதைக் கூட நேர்மையாகச் செய்யவேண்டும். இந்த நிலைப்பாட்டில் இருந்தோம் ஆனால் அதில் தொடர்ந்தும் நாம் பயணிக்க விரும்பவில்லை என்பதை மக்களிடம் நேர்மையாகக் கூறி அரசியல் செய்வது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. ஆனால் இங்கு அவ்வாறு நடைபெறவில்லை. தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு ஒரு விடயத்தையும் தேர்தல் முடிந்ததும் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பது போன்றே இங்கு பெரும்பாலான போலித் தமிழ்; தேசியவாதிகள் நடந்து கொள்கின்றனர்.

எங்கள் மத்தியில் தங்களை தமிழ் தேசியவாதிகளாக காண்பித்துவரும் சில அரசியல்வாதிகள் தமிழ் தேசியத்தை தங்களின் சுய நலன்களுக்காக உச்சரிக்கின்றனரே தவிர அதில் ஒரு போதும் உண்மையாக இல்லை. இன்று எடுத்ததற்கு எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறானவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு உண்மையாக இருக்க முடியுமா?

இவ்வாறு கேள்வியெழுப்பியிருக்கின்றார் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா. 'காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி' என்னும் நூல் வெளியீட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இந்த நூல் வெளியீடு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

ஆய்வாளர் யதீந்திரா தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் தங்களின் தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர், பிரபாகரன் போன்று மீசை வைத்துக் கொள்கின்றனர். ஆனால் மறுபுறமோ அதே தமிழரசு கட்சிக்குள் இருக்கும் இன்னொரு அரசியல்வாதியோ விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாகவும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுபவர்களும், அவரை போர்க் குற்றவாளி என்பவர்களும் எவ்வாறு ஒரு கட்சிக்குள் இருக்க முடியும்?இதன் போது யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இந்தியா தொடர்பான அணுகுமுறை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அவர் ஒரு சம்பவத்தை உதாரணமாக நினைவுபடுத்தினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது இலங்;கை விஜயம் இடம்பெறுவதற்கு முன்னர் பி.ஜே.பிக்கு நெருக்கமான திங்டாங் (think tank) ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. அவர்கள் பலரையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்;திருந்தனர். அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அப்போது அதில் ஒருவர் கேட்டார் – உங்கட கொள்கை என்ன சார்? உங்கட சம்பந்தன் திடீரென்று வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இந்து தமிழர்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை விட்டிருக்கின்றார். ஆலயங்கள் உடைக்கப்படுவதாக கூறுகின்றீர்கள். ஆனால் இதற்கு முன்னர் நீங்கள் இப்படிச் சொல்லியதில்லையே! இந்;தியாவில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும், மோடி பிரதமரானதும் திடீரென்று இந்துக்கள் பற்றி பேசுகின்றீர்கள். நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாறிப் பேசுவீர்கள். ஏதாவது ஒரு கொள்கையில் உறுதியாக நிற்கச் சொல்லுங்க சார்.

இதிலிருந்து என்ன விளங்குகின்றது? எங்களுடைய அரசியல்வாதிகளிடம் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. வெளிவிகாரம் தொடர்பில் ஒரு கொள்கை நிலைப்பட்ட முடிவு இல்லை. எல்லோருக்கும் ஏற்றவாறு நடிக்க முற்படுகின்றனர். ஒவ்வொருவருக்கு ஏற்றவாறும் நாம் நடிக்க முடியாது. மக்கள் அரசியலில் நடிகர்களை எதிர்பார்க்கவில்லை. தங்களது அபிலாசைகளுக்காக உறுதியாக நிற்கக் கூடிய தலைவர்களையே எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு எதிர்பார்த்துத்தான் சிலரை தலைவர் ஆக்கினர். ஆனால் அவர்களோ ஆற்றை கடக்கும் வரையில் அண்ணன் தம்பி ஆற்றை கடந்ததுமே நீ யாரோ, நான் யாரோ என்பது போல் இருக்கின்றனர்.

மக்களின் அறியாமையே இவ்வாறான அரசியல்வாதிகளை சீவிக்க வைத்திருக்கிறது. மக்கள் விழித்துக் கொண்டால் அல்லது அவர்களை விழிப்புறச் செய்யும் ஒரு தலைவர் எழுந்துவிட்டால் போலிகளின் காலம் ஒரு முடிவுக்கு வரும். இதனையே அரசியல் ஆய்வாளர்களாகிய நாம் தொடர்ந்தும் பல கோணங்களில் வலியுறுத்தி வருகின்றோம்.

இதில் சிலர் நடுநிலை தொடர்பில் பேசுகின்றனர். அரசியல் நிலைப்பாடுகளில் நடுநிலை வகிப்பது என்பது இயலாத காரியம். உதாரணமாக வடக்கு மாகாண சபை விவகாரத்தின் போது எவ்வாறு நடுநிலைமை வகிப்பது. ஒன்றில் விக்கினேஸ்வரன் பக்கமாக நிற்க வேண்டும் அல்லது சம்பந்தன் பக்கமாக சாய வேண்டும். எவ்வாறு இருவருக்கும் நடுவில் நிற்பது? சரிக்கும் பிழைக்கும் இடையில் நடு என்று ஒன்;றில்லை இவ்வாறு தெரிவித்த யதீந்திரா அண்மைக்கால அரசியலில் மாற்றங்களை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலில் எதுவும் நிகழலாம். 2009இற்கு பின்னரான கடந்த எட்டு வருடங்களை எடுத்து நோக்கினால் எந்தளவிற்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. ஆரம்பத்தில் சம்பந்தனோடு இருந்தவர்கள் சிலர் தற்போது அவருடன் இல்லை. ஆரம்பத்தில் விக்கினேஸ்வரனுடன் நின்றவர்கள் தற்போது அவருடன் இல்லை. விக்கினேஸ்ரனை கொண்டு வந்;தவர்களே தற்போது அவரை வெளியேற்றத் துடிக்கின்றனர். இன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இரு துருவங்களாக மாறியிருக்கின்றனர். இதுதான் நிலைமை என்றால் நாளையும் அரசியலில் எதுவும் நிகழலாம். நாம் தற்போது செய்யக் கூடியது அந்த மாற்றங்களுக்காக காத்திருப்பது ஒன்றுதான்.

இவ்வாறு அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தனதுரையில் தெரிவித்தார்.

7/13/2017 2:38:25 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்