Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh

முஸ்லிம் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைகளைக் கண்டிக்கிறோம்ருத்திரகுமாரன்

முஸ்லிம் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைகளைக் கண்டிக்கிறோம்!  ருத்திரகுமாரன்

ஈழத் தமிழினத்தின் மீது பாரிய இனஅழிப்பை மேற்கொண்டு தமிழ் மக்களை அடக்கியாழும் சிறிலங்கா அரசின் பின்னணியில் அடுத்த கட்டமாக முஸ்லிம் மக்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலை சிங்கள அரசு ஆரம்பித்து நடத்தி வருகிறது என நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. பாதிப்புக்குள்ளான முஸ்லிம் மக்களுக்கு எமது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக முஸ்லிம்களின் பாதுகாப்பையும், இயல்பான வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அதற்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

ஈழத் தமிழருக்கு எதிராகத் தரைப்படை, கடற்படை, வான்படை என்பனவற்றைக் கொண்ட முழு அளவிலான இராணுவப் பலப் பிரயோகத்தின் மூலம் பாரிய இனஅழிப்பை மேற்கொண்டு தமிழ் மக்களை அடக்கியாழும் பின்னணியில் அடுத்த கட்டமாக முஸ்லிம் மக்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலை சிங்கள அரசு ஆரம்பித்து நடத்தி வருகிறது.

தமிழ் மக்கள் இராணுவ ரீதியான இனப்படுகொலையின் மூலம் அழிக்கப்பட்டதால் உற்சாகம் அடைந்த சிங்கள அரசு அடுத்த கட்டமாக முஸ்லிம் மக்கள் மீது தனது வன்முறையை குண்டர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடத் தொடங்கியது. தமிழரை முள்ளிவாய்க்காலில் நசுக்கியதைத் தொடர்ந்து  முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பின்மையும் ஆரம்பமாகியது.

சீன அரசுடன் சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்ட யுத்தகால உறவின் தொடர்ச்சியாக சிறிலங்காவுக்கு சீனாவின் பொருளாதார ரீதியான நிதி, மூலதன ரீதியான உதவிகள் கிடைத்ததும் அதன் பின்னணியில் வர்த்தக வாய்ப்புக்களும், ஏனைய பொருளாதார வாய்ப்புக்களும் உருவாகியதும் கவனத்துக்குரியவை. சேவைத்துறைகள், தெருக்கள், புகையிரதவீதி, உல்லாச விடுதிகள், சுற்றுலாப் பிரயாண மையங்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் என்பன பெருகிய நிலையில் அவை முஸ்லிம் வர்த்தகர்களின் கைக்குப் போவதைக் கண்டு கொதிப்படையும் சிங்கள வர்த்தகர்கள் அந்த வர்த்தக வாய்ப்புக்களை தம் வசமாக்குவதற்காக முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதும் வன்முறையின் மூலம் முஸ்லிம் வர்த்தக சமூகத்தை முடக்க முற்படுவதும் தெரிகிறது.

தமிழ் மக்களின் மத்தியில் இருந்த ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டு தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கி தென் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின. குறிப்பாக ராஜபக்ச அரசாங்க ஆதரவு சிங்கள வர்த்தகர்கள் இவற்றிற்கான ஊற்றாய் அமைந்தனர். இந்நிலையில் பௌத்த மகா சங்கத்தின் உதவியுடன் முஸ்லிம் எதிர்ப்பை முதன்மைப் படுத்தி 2014ம் ஆண்டு அலுத்கமவில் பாரிய முஸ்லிம் எதிர்ப்புக் கலவரம் வெடித்தது.

ஈழத்தமிழர்கள் வடக்கு-கிழக்கில் செறிந்து ஒரு தாயக தொடர் நிலப்பரப்பில் வாழ்கின்றனர். தமிழருக்கு எதிரான வன்முறைகள் தெற்கில் வெடித்த போது தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கு நோக்கி நகர்ந்தனர். ஆதலால் அவர்களை வடக்கு-கிழக்கில் அழிப்பதற்கு முழு அளவில் இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் முஸ்லிம் மக்களின் நிலை வேறு. மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 52 வீதமானோர் தெற்கில் சிதறுண்டு வாழ்கின்றனர். அதைவிட கிழக்கில் அம்பாறையில் அவர்கள் செறிந்து வாழ்ந்தாலும் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் அங்கு மூன்றில் ஒருபங்கு சனத்தொகையில் சிங்கள குடியமர்வு உருவாகியது. சிங்கள பொலீஸ், இராணுவ, புலனாய்வுத்துறை மற்றும் நிர்வாக ஆதிக்கத்தின் மூலம் அம்பாறையில் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான வாய்ப்புக்களை சிங்கள இனம் பெற்றிருந்தது.

தெற்கிலே சிதறுண்டு வாழும் முஸ்லிம்களை குண்டர்கள் மூலம் ஒடுக்குவது இலகுவானது என்ற நிலையில் சிங்கள இனவாதம் குண்டர் அரசியலை முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழத்து விட்டுள்ளது. அதாவது தமிழருக்கு எதிராக இராணுவ வன்முறையும், முஸ்லிம்களுக்கு எதிராக குண்டர் வன்முறையும் என அதன் வன்முறைப் போக்கு அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் செறிந்துள்ள அம்பாறை மாவட்டத்தில் மூன்று வாரங்களுக்கு முன் குண்டர்கள் மூலம்; கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இனவாத சக்திகள் முஸ்லிம்களின் இரண்டாவது பலம் பொருந்திய இடமான கண்டியில் இவ்வாரம் தமது வன்முறைகளைப் பரப்பியுள்ளனர். இது வெறும் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. ஒரு வீதி விபத்தை சாக்காகக் கொண்டு ஒரு பெரும் வன்முறையை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ளதே உண்மை. இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன, முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பெரும் கட்டடங்கள், குடியிருப்புக்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை 2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பதிவான தகவல்களும் உண்டு.

சிங்கள-பௌத்தர்களுக்கு அடுத்த பெரிய இனமான ஈழத் தமிழர்களை அழிப்பது அவர்களின் முதலாவது நிகழ்ச்சி நிரலாக இருந்தது. இக்கால கட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களைப் பிரித்தாளும் வகையில் இரு இனங்களுக்கும் இடையே திட்டமிட்ட பகைமைகளை சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் ரீதியாகவும், புலனாய்வுத்துறையினர் வாயிலாகவும் மேற்கொண்டதையும் நாமறிவோம்.

இத்தகைய பின்னணியில் தமிழர்களும், முஸ்லிம்களும், ஏனை இனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சிங்கள-பௌத்த இனஅழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தற்காப்பை மேற்கொள்ள முடியும். தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டியதுடன் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து பலம்பொருந்திய சக்தியாக செயற்படவேண்டிய வரலாற்று அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது.

இத்தருணத்தில் முஸ்லிம் சகோதர்களோடு நாம் ஒருமைப்பட்டு நிற்கின்றோம் என்பதையும் முஸ்லிம் மக்களோடு தோளோடு தோள் நின்று அவர்களின் பாதுகாப்புக்காக பாடுபடுவோம் என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

3/10/2018 1:38:55 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:

முந்தய பதிவுகள்

ஒலிப்பதிவுகள்
• செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

• ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

• மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

• முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

• புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்