Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புலிகளை நினைவுகூர்ந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சர்

<p>புலிகளை நினைவுகூர்ந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சர்</p>

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதனது கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மவரமண்டிய என்ற இடத்தில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் கூறினார்.

“தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரபாகரன்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயிரிழந்த அவர்களது உதவியாளர்களும் கூட தீவிரவாதிகள் தான். மோசமான பயங்கரவாத அமைப்பு என்று விடுதலைப் புலிகளை பல நாடுகளும் கூட தடை செய்திருக்கின்றன.

அத்தகையதொரு அமைப்பை ஆதரிப்பது அல்லது அதன் தலைவர்களையோ, உறுப்பினர்களையோ நினைவு கூருவது இந்த நாட்டின் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர்களையும் சிலர் வடக்கில் நினைவுகூர்ந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காணும் காவல்துறை விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தவறு செய்த குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

11/29/2017 5:20:58 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்