Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஐ போனில் சுட்ட வடை

<p>ஐ போனில் சுட்ட வடை</p>
தம்பா

 

காற்றை கிழித்து

கிழிந்த சட்டை போட்ட 

நெளிந்த சைக்கிள்

சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.

 

சைக்கிள் பாருக்குள்ளால்

அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக

மூச்சிரைக்கும் தலையும் உடலும்.

 

வறண்ட வாய்க்கால் மதகில்

படுத்தபடி

உச்சி வெய்யிலுக்கு புகை போடும்

உயர் தர மாணவனைக் கண்டு

வெறுங்காலை டயரில் தேய்த்து

எட்ட நின்று நிதானித்த சைக்கிள்

உருண்டு வந்து கேட்டது

'பொட்டலமா? போத்திலா?'

 

எட்டாத ஸீட்டுக்குள்ளிருந்து

'குடு´ பொட்டலம் வெளிவந்து

பணப்பொட்டலம் உள்ளேறிக் குத்தியது.

 

கொடுத்தும் வேண்டியும்

உயிர் பரிமாறும் காலம் இது.

 

கிழிந்த சட்டைக்கோ

ஐ போன் வேண்டக் கனவு,

தெளிந்த சட்டைக்கோ

ஐ போன் விட்டு

வெளிநாடு போகக்கனவு.

 

வீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த

பெரிய வாத்தியார்

கண் காது மூச்சு எல்லாவற்றையும் 

உள்ளிளுத்து மரக்கட்டையாய் மாறி

கரையால் பதுங்கிப் போனார்.

 

சந்தியில் பட்ட நால்வரிடம்

'ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல

'ஊரோட மனச்சாட்சி´ என

சரணம் சொன்னது சாராய நாற்றம்.

 

ஓயாத தேசியம்

ஒழித்துப்போட்ட வேர்கள் இவை.

வறுமையின் இயலாமை

வெறுமையின் நிழலில் துளிர்க்கிறது,

 

'கறையான் அரித்த தண்டவாளமும்

காண்பாயோ?

கண் கெட்டபின்

சூரிய நமஸ்காரமும் செய்வாயோ?'

2/24/2017 4:31:52 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்