Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்த நாட்டுப் பிரச்சினையை இந்த நாட்டில்தான் தீர்க்கவேண்டும் என்கிறார் அமைச்சர் நிமல்

இந்த நாட்டுப் பிரச்சினையை இந்த நாட்டில்தான் தீர்க்கவேண்டும் என்கிறார் அமைச்சர் நிமல்

 

அரசியல் தீர்வைத் தயாரிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இந்நேரம் அது தொடர்பில் ஒரு முடிவை எட்டியிருக்கலாம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பில் அரசுடன் பேச வருமாறு நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் வரவில்லை. அதேபோல், அரசியல் தீர்வைத் தயாரிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தோம். அதற்கும் வரவில்லை.

அரசியல் தீர்வை எட்டுவதற்கான செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து விலகிக்கொண்டு அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று வெளிநாடுகளிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

இந்த நாட்டுப் பிரச்சினையை இந்த நாட்டில்தான் தீர்க்கவேண்டும். வெளிநாடுகளில் அல்ல. தமிழ் மக்களுக்காகப் பேசுகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது கூட்டமைப்பு என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா

1/2/2013 4:46:47 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்