நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையக முற்றுகைப் போராட்டம் ஏன் நடத்தப்படுகின்றது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது.
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி காலை 10 மணியளவில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பில், தமிழக ஊடகங்கள் தங்கள் சார்பில் செய்தியாளர்களை அனுப்பி கலந்து கொள்ளச் செய்து, இது குறித்த செய்தியினை தங்கள் ஊடகத்தில் வெளியிட வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.