Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

விடுதலை புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய அசோக் மேத்தாவுக்கு எதிராக சிங்கள தேசியவாதிகள் ஆவேசம்!

விடுதலை புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய அசோக் மேத்தாவுக்கு எதிராக சிங்கள தேசியவாதிகள் ஆவேசம்!

 

சிறிலங்கா அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரும் அசோக் மேத்தா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களுக்கு இந்தியா பொதுமன்னிப்பு வழங்குமா எனச் சிந்திக்க வேண்டும் என்று  சிங்கள பௌத்த தேசியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற 'ஸ்திரத்தன்மையை நோக்கிய நிலையான சமாதானம்' எனும் பொருளிலான சிறிலங்காவின் படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் 383 பேர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்பதாக கூறியிருந்தார்.

இது தொடர்பில் இக்கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட இந்திய அமைதி காக்கும் படையில் முன்னர் பணியாற்றிய ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, சட்ட நவடிக்கை எடுப்பதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 383 விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மரபுரீதியான போர் அணுகுமுறைகளில் விடுதலைப் புலிகளின் போராளிகள் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதனால், அவர்களை படைத்துறையில் இணைத்துக் கொள்வது சிறிலங்கா படைத்துறைக்கு நன்மை ஏற்படும் என அசோக் மேத்தா கூறியிருந்தார்.

அத்துடன், அவர்களை படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா ஜனாதிபதி விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவரின் இக்கருத்துத் தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள சிங்களத் தேசியவாத ஊடகங்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், சிறிலங்காவுக்கு எதிரான சக்திகளாலும் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.

அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்பில் நன்கு அறிந்துள்ள அவர், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோருவது வேடிக்கையான விடயம் என்றும் இவ்வூடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அசோக் மேத்தாவின் வேண்டுகோள் தொடர்பில் படைத்துறைக் கருத்தரங்கில் பதிலளித்த சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 'நாட்டைப் பாதுகாப்பதே படைத்தரப்பினரின் முதன்மையான கடமை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகள் மீண்டும் ஒருங்கிணைவதை படைத்தரப்பினர் தடுக்க வேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், சிறிலங்காவுக்கு எதிரான சக்திகளும் தான் இந்தியாவுக்குத் தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.

8/11/2012 1:55:48 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்