Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நவநீதம்பிள்ளையின் நிபுணர் குழுவினது ஆலோசனைகளை ஏற்கப் போவதில்லை! - சிறிலங்கா அறிவிப்பு!!

நவநீதம்பிள்ளையின் நிபுணர் குழுவினது  ஆலோசனைகளை ஏற்கப் போவதில்லை! - சிறிலங்கா அறிவிப்பு!!

 

போருக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவைச் சோந்த நிபுணர் குழுவின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

'அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிபுணர் குழு அடுத்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இவர்கள் அவதானிப்பாளர்களாகவே கொழும்புக்கு வரமுடியுமே ஒழிய, ஆலோசனைகளை வழங்க முடியாது. அவர்கள் கூறும் ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ சிறிலங்கா அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது.

அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் வடக்குக் கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நேரில் வந்து பார்வையிடுங்கள்.

இலங்கைக்கு வரும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிபுணர் குழு அறிக்கைகளை வெளியிடக் கூடும். ஆயினும் அதன் பரி;ந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது. நாட்டின் இறைமையைத் தான் அரசாங்கம் எப்போதும் கவனத்தில் கொள்ளும்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு மட்டுமன்றி, தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நோரில் பார்க்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது' என கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

8/10/2012 3:21:41 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்