Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீதொட்டமுல்ல அனர்த்தம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்!

மீதொட்டமுல்ல அனர்த்தம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்!



கொலன்னாவ மீதொட்டமுல்லவில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பெருமளவு வீடுகள் குப்பை மேட்டின் கீழ் புதைந்து போயுள்ளன.

புதைந்து போன வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இன்னமும் சுமார் 20 பேர் வரையில் குப்பை மேட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், இந்தச் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சிறிலங்கா படைத்தரப்பின் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

4/16/2017 3:19:23 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்