Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள் (படங்கள் இணைப்பு)

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள் (படங்கள் இணைப்பு)

 

தமிழீழத் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் ஏலவே யூன் 26ம் நாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கு சமாந்தரமாக அதேநாளில் புலம்பெயர் நாடுகளிலும் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள்  இடம்பெற்றிருந்தன.

அமெரிக்கா 

நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள் (படங்கள் இணைப்பு)

பிரித்தானியா:

பிரித்தானியப் பிரமதர் டேவிட் கமறூன் அவர்களது அதிகாரபூர்வ இல்லத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்ததோடு தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.

பிரான்ஸ்:

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள் (படங்கள் இணைப்பு)

ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களில் ஒன்றான நோக்கி, கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்ததோடு அதிகாரிகளிடம் மனுவும் கையளிக்கப்பட்டது.

கனடா:

தமிழர் தாயகத்தில் இருந்து சிறிலங்காவே வெளியேறு என்ற முழக்கத்துடன், நில அபகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமாக, ரொறன்ரோவில் உள்ள சிறிலங்காவின் உயர்காரியாலயத்திற்கு முன்னால் போராட்டம் இடம்பெற்றது.

ஜேர்மனி

பொன் நகரில் உள்ள ஐ.நாவின் காரியாலயத்திற்கு முன்னர் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தாயகப் போராட்டங்களுக்கு சமாந்தரமாக இவ்வாறான போராட்டங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

6/26/2012 4:39:06 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்