Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முள்ளிவாய்க்காலில் புதனன்று போராட்டம்!

<p>கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முள்ளிவாய்க்காலில் புதனன்று போராட்டம்!</p>முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள  காணிகளை விடுவிக்குமாறு கோரி இப்பிரதேச மக்களால் எதிர்வரும் புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர் காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த சிறிலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இப்பகுதிக்குள் பொதுமக்களுக்கு சொந்தமான கால்நடைகளும் உள்ளன.

சிறிலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 617 ஏக்கர் காணிகளும் மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும், அதிக வருமானம் தரக்கூடிய கடற்தொழில் பகுதிகளையும் கொண்டுள்ளது.

இந்தக் காணிகளை விடுவிக்குமாறும், கால்நடைகளை மீட்டுத்தருமாறும் அதன் உரிமையாளர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும், அது தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரியதரப்புக்கள் கவனம் செலுத்தாத நிலையில், வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைமுகாம் முன்பாக எதிர்வரும் புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் வடிவத்தை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி ஆரம்பித்த இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 57ஆழாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

ஆயினும் இந்தக் கோரிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை.

இந்நிலையில், குறித்த போராட்டத்தின் வடிவத்தை மாற்றி வேறுவடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் ஒன்று
 
இதில் காணாமல் போனோரின் உறவினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4/17/2017 3:27:46 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்