Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சசிகலா, பன்னீர்செல்வம் அணிகளுக்கு தேர்தல் ஆணையகம் அழைப்பு!

<p>சசிகலா, பன்னீர்செல்வம் அணிகளுக்கு தேர்தல் ஆணையகம் அழைப்பு!</p>இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் விசாரணை நடத்த அ.தி.மு.கவின் சசிகலா அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் தேர்தல் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, இவ்விரு அணியினரும் எதிர்வரும் 22ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தில் முன்னிலையாக வேண்டும் என தேர்தல் ஆனையாளர் நசீம் ஜைதி கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெயலலிதா காலமானதை அடுத்து, அந்தத் தொகுதிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இந்த தொகுதிக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணையகம் தீர்மானித்தது.

இத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மதுசூதனனும், சசிகலா அணியில் இருந்து தினகரனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தாங்களே உண்மையான அ.தி.மு.க எனவும், தங்களுக்கே இரட்டை இலை சின்னம் வழங்கப்பட வேண்டும் என்றும் இவ்விரு தரப்பினரும்
தேர்தல் ஆணையகத்திடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலலேயே, இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் விசாரணை நடத்த இவ்விரு அணிக்கும் தேர்தல் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது.

3/18/2017 4:03:08 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்