Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

லசந்த கொலை வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு இராஜதந்திரி பதவி வழங்கினார் கோத்தபாய!

<p>லசந்த கொலை வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு இராஜதந்திரி பதவி வழங்கினார் கோத்தபாய!</p>சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான புலனாய்வு அதிகாரி மேஜர் பண்டார புலத்வத்த தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இவருக்கு தாய்லாந்துக்கான சிறிலங்கா தூதரகத்தில் சிறிலங்காவின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராஜதந்திரப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொடுத்தமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.  

குறித்த தூதரகத்தில் இரண்டாவது செயலாளராக மேஜர் பண்டார புலத்வத்தவை நியமிக்குமாறு வெளிவிவகாரச் செயலாளரிடம் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக மேஜர் பண்டார புலத்வத்தவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறப்படுகின்றது.

இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேஜர் பண்டார புலத்வத்தவின் நியமனத்தை நிறுத்துமாறு வெளிவிவகாரச் செயலாளரை கோத்தபாய ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் வெளிவிவகாரச் செயலாளரிடம் சிறிலங்காவின் அப்போதைய தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்ததாக இந்தப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான புலனாய்வு அதிகாரி மேஜர் பண்டார புலத்வத்த தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4/23/2017 2:38:05 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்