அமெரிக்காவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்திலுள்ள சீக்கிய கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டதை அடுத்தே இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த வியடம் குறித்து அமெரிக்க இராஜங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் மற்றும் இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கு இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இக் கொலைகள் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என .கிருஷ்ணா கோரியதாகவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே தாராளவாத துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என கிருஷ்ணா இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் சம்பவத்தை; கண்டித்திருந்த இந்தியப் பிரதமர மன்மோகன் சிங், இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் அனுதாபம் வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.