ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு திரும்பியுள்ளதாக சிறிலங்காவின் படைத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும் சிறிலங்கா அரசாங்கத்திடமோ அல்லது துமிந்த சில்வாவின் குடும்பத்தினரிடமோ இதனை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரியாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துமிந்த சில்வா சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான வழக்கில இவர் மீது குற்றம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் நினைவில் இல்லை என்று துமிந்த சில்வா தெரிவித்ததாக சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இச் செய்தி வெளியாகியுள்ளது.