Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீதொட்டமுல்ல அனர்த்தம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!

மீதொட்டமுல்ல அனர்த்தம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!



கொலன்னாவ மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு மேல் பாரீய குப்பைமேடு சரிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் 100 பேர் வரை தமது வீடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகளில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 100 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் 30க்கும் மேற்பட்ட அகழ்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆயினும், குப்பைக்குள் புதைந்து போனவர்கள் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பின் குரல்தரவல்ல அதிகாரி பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

இதனால் இந்த விபத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதில் அதிகாரிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த விபத்தில் 80 வீடுகள் முற்றாக குப்பை மேட்டுக்குள் புதைந்துள்ளதாகவும், 36 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குப்பை மேட்டில் இன்னொரு சரிவு இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், சிறப்பு நிபுணர்கள் குழு ஒன்று அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

4/17/2017 1:48:22 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்