Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

குன்னூர் கருத்தரங்கை இரத்துச் செய்து சிறிலங்கா படையதிகாரிகளை திருப்பி அனுப்புக! - ஜெயலலிதா

குன்னூர் கருத்தரங்கை இரத்துச் செய்து சிறிலங்கா படையதிகாரிகளை திருப்பி அனுப்புக! - ஜெயலலிதா

 

தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கை இரத்துச் செய்து சிறிலங்காவின் படை அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிங்டன் பயிற்சி மையத்தில் இன்று இடம்பெறுகின்ற படைத்துறைக் கருத்தரங்கில் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள குள்ளூர் சென்றுள்ளனர்.

அதனையடுத்து குன்னூரில் பதற்ற நிலை தோன்றியிருப்பதுடன், இவர்களுக்கு எதிராக ம.தி.மு.க.வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், வெலிங்டன் பயிற்சி மையத்தை இன்று முற்றுகையிடவும்  தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'சென்னை தாம்பரத்தில் பயிற்சி பெற வந்த சிறிலங்காவின் விமானப் படையினரை  இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்த போதிலும், அவர்கள் வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறும் கருத்தரங்கில் பங்கேற்க சிறிலங்காவின் படை அதிகாரிகள் வந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி சிறிலங்கா படைத்தரப்பினருக்கு பயிற்சிகளை வழங்கும் மத்திய அரசின் கடும் போக்கால் தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர்.

குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கை இரத்துச் செய்து சிறிலங்காவின் படை அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும்.

அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பினருக்கான அனைத்துப் பயிற்சிகளைகளையும் இரத்துச் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்த வேண்டும்' என இக்கடித்தில்  முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

7/16/2012 1:16:12 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்