Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சூடானுடன் படைத்துறை உறவுகளை வலுப்படுத்த முடிவு! - கோத்தபாயவின் பயணத்தில் உடன்பாடு!!

சூடானுடன் படைத்துறை உறவுகளை வலுப்படுத்த முடிவு! - கோத்தபாயவின் பயணத்தில் உடன்பாடு!!

 

சூடானுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான  படைத்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.

சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சூடானுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

சூடானுக்கு கடந்த 26ஆம் திகதி விஜயம் செய்த சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் படைத்தரப்பின்  தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சூடானுக்கு விஜயம் செய்திருந்தனர்.

சூடான் படைத்துறை அமைச்சர் அப்துல் ரகீம் முகமட் ஹூசைன், படைத்துறைச் செயலாளர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் முகமட் சய்ன், படைத்தரப்பின் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் இமாட் அடாவி மற்றும் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் இஸ்மத் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலருடனும் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா தரப்புக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அத்துடன், சூடான் படைத்தரப்பின் முக்கிய பயிற்சி நிலையங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்த இக்குழுவினர், சூடான் படைத்தரப்பின் உயரதிகாரிகளை சிறிலங்காவுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேவேளை, 'தீவிரவாதத்தை தோற்கடித்தமை மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறிலங்காவின் அனுபவங்கள்' எனும் பொருளில்  சூடானின் முக்கியமான கார்ட்டூம் படைத்துறைக் கல்லூரியில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

இவ்விஜயத்தின் இறுதியில் இவ்விரு நாடுகளின் படைத்துறையினருக்கு இடையில் பயிற்சிகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்;பட்டுள்ளது.

8/31/2012 12:22:59 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்