Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைப்பு! - லங்கா நியூஸ் வெப் செய்தி!!

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைப்பு! - லங்கா நியூஸ் வெப் செய்தி!!



நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக பணிபுரியும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள லங்கா நியூஸ் வெப் இணையத்தளம்,  சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இம்மாதம் நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில், அதனை ஒடுக்குவதற்காகவே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரி என்ற ரீதியிலேயே சிறிலங்;கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இப்பணியை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளார். இதையடுத்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கொழும்பு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித்  தேர்தலுக்குப் பின்னர், கொழும்பு விடுதி ஒன்றில் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முறையற்ற முறையில் சகலவிதமான பணிகளையும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 8ஆம் திகதி அதே பணியை மீண்டும் செய்யவுள்ளார் என லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

1/3/2013 1:53:08 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்