Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இரட்டை இலை சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு!

இரட்டை இலை சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு!இரட்டை இலை சின்னத்தைப் பெற அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டி.டி.வி.தினகரன் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர இலஞ்சம் வாங்கியதாக கூறி, சுகேஷ் சந்திரசேகர் என்பவரை பெருந்தொகை பணத்துடன் டெல்லி பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

டெல்லி பொலிஸாருக்கு சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில், அந்தப் பணத்தை டி.டி.வி.தினகரனிடம் இருந்து பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பேரம் பேசப்பட்டாகவும் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தமக்கு சுகேஷ் சந்திரசேகர் என்கிற பெயர் கொண்ட எவரையும் தெரியாது என்றும், அவரிடம் பணம் கொடுத்ததாக வெளியாகும் தகவல் பொய்யானது என்றும் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சியை அழிக்கும் நோக்கத்தில், அரசியல் இலாபத்திற்காக தன் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக தெரிவித்த டி.டி.வி.தினகரன், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே டெல்லி பொலிஸார் நாளை சென்னை செல்லவுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கூறி டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

4/17/2017 1:56:54 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்