Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இறுதிக்கட்டப் போரில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை!

இறுதிக்கட்டப் போரில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை!

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய ஆபரணங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, மத்திய வங்கியிடம் முன்வைக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு ஏற்ப, சிறிலங்கா படையினரால் ஒப்படைக்கப்பட்ட 37.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி வரையான காலத்தில் 28 தடவைகள் சிறிலங்கா படையினரால் வழங்கப்பட்ட தங்க ஆபரணப் பொதிகளை பெற்றுக் கொண்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் இந்த தங்க நகைகள் அனைத்தும் சிறிலங்காவின் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் எடை போடப்பட்டு விலை மதிப்பீடு செய்யப்பட்டது.

அத்துடன், சிறிலங்கா படையினர் கடந்த ஆண்டு தங்கப் பொருட்களைக் கொண்ட 6003.132  கிராம் எடையுள்ள இன்னொரு பொதியை கையளித்ததாக  மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவை மத்திய வங்கியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர், சிறிலங்காவின் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் எடை போடப்படவோ, விலை மதிப்பீடு செய்யப்படவோ இல்லை.

அதேவேளை, சிறிலங்கா படையினர் இன்னமும் கணிசமான தங்கம் மற்றும் பெறுமதிமிக்க ஆபரணங்களை தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக  சிறிலங்கா படைத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.

இந்நிலையில், உரிமையாளர்களிடம் தங்க நகைகளை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

4/17/2017 2:22:53 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்