Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இலங்கையின் யூதர்கள்?

<p>இலங்கையின் யூதர்கள்?</p>
பீஸ்மர்

 

ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் நாம் பெருமிதப்பட்டதுண்டு. இப்போதும் அவ்வப்போது இப்படியான பெருமிதங்களுடன் எங்கள் மத்தியில் சிலர் வலம்வருவதுண்டு. ஆனால் நாங்கள் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடத்தை பார்த்தால் இப்படியான பெருமிதங்களுக்கான ஆகக் குறைந்த தகுதியாவது எங்களுக்குண்டா என்னும் கேள்வியைத்தான் வெறித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. டயஸ்போறா என்னும் சொல் எங்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஒன்று. இந்த ஒன்றை வைத்துக் கொண்டுதான் நாங்களும் யூதர்களும் ஒன்றுதான் என்னும் எண்ணம் எம்மவர் மத்தியில் துளிர்விட்டது. ஆனால் பின்நோக்கி பார்த்தால் யூதர்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவென்பது மலைக்கும் மடுவுக்குமுள்ள தொடர்பு போன்றது. யூதர்கள் எங்கோ. ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் வேறொங்கோ.

ஆனால், இன்றைய நிலமைகளை மிகவும் ஆழமாக மதிப்பிட்டால் யூதர்கள் போன்று சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் இலங்கையின் முஸ்லிம்கள் ஆவர். இலங்கையின் சகல பாகங்களிலும் பரந்து வாழ்ந்துவரும் அவர்கள் இலங்கையின் அரசியலில் தவிர்க்க முடியாதவொரு தீர்மானகரமான சக்தியாக வளர்ந்திருக்கின்றனர். தமிழர் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையிலான முரண்பாட்டை மிகவும் நுட்பமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கையின் உயரடுக்கு (Elite) முஸ்லிம்கள், இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய கட்சிகளிலும், அதேவேளை வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தங்களுக்கென தனியான அரசியல் கட்சிகளையும் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் கட்சிகளை கொண்டிருந்த போதிலும் அதன் மூலமாக முஸ்லிம்களுக்கான உரிமைசார் அரசியலை ஒரு போதும் அவர்கள் முன்னெடுத்ததில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை தங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்வதில் அவர்கள் மிகவும் மதிநுட்பத்துடன் செயலாற்றி வருகின்றனர்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறிய விடயங்கள் அவர்கள் எந்தளவிற்கு தங்களது விடயங்களில் மதிநுட்பத்துடன் செயலாற்றி வருகின்றனர் என்பதற்கு ஒரு நல்ல சான்று. இந்தக் கூட்டத்தின் போது ஒரு முஸ்லிம் நபர் பின்வருமாறு கேள்வி கேட்கிறார். தலைவர், அரசியல் தீர்வு என்கிறார்களே! வடக்கு கிழக்கு இணைப்பு என்கிறார்களே! இதெல்லாம் என்ன விடயம்? இதற்கு ஹக்கீம் இவ்வாறு பதிலளிக்கின்றார்: அரசியல் தீர்வு வந்துவிட்டதா - இல்லையே! வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டுவிட்டதா - இல்லையே! பின்னர் நாங்கள் ஏன் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டும். இப்படியான விடயங்களை பேசுவதற்கு சம்பந்தனும் கூட்டமைப்பும் இருக்கிறது. அவர்கள் பேசி, ஒரு கட்டத்தில் விடயங்கள் அனைத்தும் மேசைக்கு வரும்தானே! அதுதான் எங்களுக்குரிய நேரம். அப்போது எங்களுக்குரிய விடயங்களைக் கேட்போம். நாங்கள் சும்மா தேவையில்லாமல் இது பற்றியெல்லாம் பேசக்கூடாது. இதுதான் முஸ்லிம் சாணக்கியம்.

இன்று கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தமிழர்களை விடவும் சகல துறைகளிலும் பின்நோக்கியே இருந்தனர். ஆனால், இன்று கிழக்கு மாகாணத்தில் வர்த்தகத்தையும் அதேவேளை அரசியலையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு சமூகமாக அவர்கள் வளச்சியடைந்திருக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் அமைந்திருக்கிறது. வர்த்தகத்திற்கு உடனடியாகவும் நீண்ட கால நோக்கிலும் பயன்படக்கூடிய தமிழர்களின் தனியார் காணிகளை அதிக விலைகொடுத்து வாங்கி வருகின்றனர். முக்கியமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையின் நகர்புற தமிழ் காணிகளை அதிக விலைகொடுத்து வாங்கி வருகின்றனர். இதனைத்தான் காசாவில் யூதர்கள் செய்தனர். இவ்வாறு வர்த்தகத்திற்கான மைய நிலங்கள் முஸ்லிம்களின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்குமானால், எதிர்காலத்தில் தமிழர்களிடம் எந்தவொரு வியாபாரமும் இருக்காது. ஏனெனில் வியாபாரம் செய்வதற்கு பிரதான வீதிகளுடன் இணைந்த பகுதிகள் அவசியம். ஆனால் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கின் தமிழர்கள் இழந்துவருகின்றனர்.

தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மட்டும்தான் ஒரளவு தப்பியிருக்கிறது. அங்கும் அவர்கள் அண்மைக்காலமாக தங்களின் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். இதற்கென பள்ளிவாசல்களை மையப்படுத்தி ஒரு இரகசிய பிரிவு தொழிற்பட்டு வருகின்றது. உதாரணமாக தமிழ் பகுதியில் ஒரு காணி விலைக்கு வருகிறதென்றால் அதனை வாங்குமாறு குறித்த பிரிவு முஸ்லிம் வர்த்தகர்களை ஊக்குவிக்கிறது. உதாரணமாக குறித்த காணியின் அல்லது கட்டடத்தின் விலை 70 லட்சம். ஆனால் அந்தளவு தொகையை குறித்த வர்த்தகரால் உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாதிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இரகசிய பிரிவு மேலதிகமாக தேவைப்படும் தொகையை குறித்த வர்த்தகருக்கு வழங்கி, அவரின் மூலம் குறித்த தமிழரின் சொத்தை உடனடியாக வாங்கிவிடுகின்றது. இதன் பின்னர் குறித்த காணிக்கான ஆவணம் பள்ளிவாசலில் அல்லது குறித்த இரகசிய பிரிவிடம் இருக்கும். குறித்த வர்த்தகர் பின்னர் தொகையை செலுத்திவிட்டு ஆவணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று பள்ளிவாசல் சம்மேளனங்கள், முஸ்லிம் அறக்கட்டளை நிலையங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் தமிழர்களின் காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. மேலோட்டமாக பார்த்தால் இதனை ஏதோ வர்த்தக நோக்கில் வாங்குவது போன்றுதான் தெரியும். ஆனால் இதன் உள்நோக்கம் தமிழர்களை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவதும் தங்களில் தங்கியிருக்கச் செய்வதுமேயாகும். இந்த நிலைமை இப்படியே நீடித்தால் இளைய தமிழ் தலைமுறைக்கு முன்னால் மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று தொழில் செய்வது மட்டும்தான் ஒரேயொரு தெரிவாக இருக்கும்.

இன்றைய நிலையில் இலங்கையை பொறுத்தவரையில், முஸ்லிம்கள் மூன்று மொழிகளிலும் பாண்டியத்தியம் மிக்கதொரு சமூகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இன்று ஆங்கிலத்தில் எழுதுபவர்களில் அனேகர் முஸ்லிம்களாவர். உதாரணமாக ‘கொழும்பு டெலிகிராப்பை’ பார்த்தீர்களானால் அதில் எழுதும் அனேகர் முஸ்லிம்களாகவே இருப்பர். இதனை ஒரு உதாரணமாகவே எடுத்தாள்கின்றேன். அதேபோன்று இலங்கையில் ஏனைய ஊடகங்களிலும் தமிழ்மொழி பேசுவோர் என்னும் அடிப்படையில் அவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் எம்மவர்கள் முகநூல்களில் தங்களின் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். மிகவும் மதிநுட்பத்துடனும் நீண்டகால நோக்கத்துடனும் அவர்களது மதத்தலைமையும் அரசியல் தலைமையும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிதி உதவியின் கீழ் முஸ்லிம் பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு சட்டத்துறையில் கற்பதற்கான நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் தற்போது முஸ்லிம் மத்தியதர வர்க்கம் தங்களின் பிள்ளைகளை கல்வியிலும் மேலோங்கச் செய்வதற்கான செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றன. இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றுதான். அதாவது, முஸ்லிம்களை சமூக அரசியல் பொருளாதார ரீதியில் தீர்மானகரமான சக்தியாக மாற்றுவதாகும். இன்று வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் கூட ஒரு நீணடகால நோக்கத்தின் அடிப்படையில்தான். அதாவது, இன்னும் சில வருடங்களில் கிழக்கு முற்றிலும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

<p>இலங்கையின் யூதர்கள்?</p>

ஆனால் நாமோ யூதக் கற்பனையில் தந்திரோபாயங்களற்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். சமாதான ஒப்பந்த காலத்தில் புலம்பெயர் சமூகம் கிழக்கின் முக்கிய பகுதிகளில் அதிக காணிகளை கொள்வனவு செய்திருக்க முடியும். குறிப்பாக திருகோணமலை போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கரையோரப் பகுதி காணிகளை வாங்கியிருக்க முடியும். ஆனால் தூரநோக்கற்று செயற்பட்டதன் காரணத்தினால் இன்று காணிகளை முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்ற நிலமை உருவாகியிருக்கிறது. உண்மையில் எங்களிடம் யூதக் குணம் இருந்திருக்குமானால் அன்றிருந்த பொருளாதார பலத்திற்கு, பல தனியார் கம்பனிகளை பதிவுசெய்து, அதன் பேரில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பல காணிகளை, கட்டிடங்களை கொள்வனவு செய்திருக்க முடியும்.

அன்றைய சூழலில் தமிழ் புலம்பெயர் சமூகத்தை நோக்கி இவ்வாறான கோரிக்கைகளை சிலர் முன்வைத்த போதும் அதனை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்றும் கூட இந்த வழியில் புலம்பெயர் சமூகம் தனது சிந்தனையை திருப்ப முடியும். இனியாவது இது தொடர்பில் சிந்திக்க முடியும். புலம்பெயர் சூழலிலுள்ள வசதிபடைத்த தமிழர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ விற்பனைக்குள்ள தனியார் காணிகளை கொள்வனவு செய்ய முடியும். முக்கியமாக கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர பகுதிகளில், பண்ணைத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய காணிகளை கொள்வனவு செய்ய முடியும். உல்லாசப் பயணத்துறை மற்றும் பண்ணை முயற்சிகளில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் அப்பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க முடியும். ஐரோப்பிய நாடுகளிலுள்ள தொழில் ஆர்வலர்களையும் இணைத்துக் கொண்டு, ஒரு கூட்டு முயற்சி என்னும் வகையில் உல்லாசப் பயணத்துறை மற்றும் ஏனைய தொழில் துறைகளில் முதலீடுகளை செய்ய முடியும். ஒரு சமுதாயத்தை பாதுகாப்பது என்பது வெறுமனே அரசியல் கோசங்களை எழுப்புவதால் மட்டுமோ அல்லது வீதிகளில் இறங்கி சத்தமிடுவதால் மட்டுமோ செய்துவிட முடியாது. அப்படி செய்துவிடலாம் என்று நம்புவது மிகவும் அப்பாவித்தனமானதொரு நம்பிக்கையாகும்.

யூத சமூகம் தனது இருப்பை பாதுகாப்பதற்காக கோசங்களை எழுப்பிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, தனக்கான தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட்டதன் விளைவாகவே அதனால் மீளவும் நிமிர்ந்தெழ முடிந்தது. யூதக் கற்பனையில் இருப்பதை விடுத்து யூதர்கள் போன்று சிந்திப்பதற்கு செயலாற்றுவதற்கும் தயாராவோம்.

1/17/2017 10:29:38 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்