Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தென்றலைத் தீண்டியதில்லை

<p>தென்றலைத் தீண்டியதில்லை</p>
இரவி அருணாசலம்

 

கையெழுத்து

இப்போது இதைச் சொல்ல வேண்டுமா, தெரியவில்லை. என் ஞாபகப் பல்லிடுக்கில் இருந்து ஒரு துகளை எடுக்கிறேன். தமிழ்நாட்டுத் தேர்தல் நடக்க இருக்கிற சமயம் இது. அதனால் இந்தக் கையெழுத்து.

இலங்கைத் தேர்தலைப் போலவே 1967ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டுத் தேர்தலும் என்னுடன் கூடப் பயணித்தது. அப்பொழுது நாம் கீரிமலையில் வசித்தோம். 'ஆகாஷ் வாணி' ஒலிபரப்பு தன் செய்தியறிக்கையில் தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது என்று அறிவித்தபோது வெடி ஒலிகளினால் கீரிமலை ஒரு கணம் அதிர்ந்தது. அண்ணா, எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், கருணாநிதி என்ற பெயர்களை கீரிமலை கடற்காற்று அள்ளிச் சென்றது. அன்று பேசப்பட்ட யாவும் திராவிட அரசியல் அல்ல, தி.மு.க. அரசியல்.

நாங்கள் இருந்தது சின்னமாமாவின் வீட்டில். அவ்வீட்டின் தீராந்தியில் சட்டம் போட்டுப் படங்கள் இருந்தன. எனது 'உடம்பு பிரட்டிய' படமும் அதில் ஓன்று. என் ஞாபக அடுக்கு இவ்வாறுதான் அதனை அறிவிக்கிறது: அதில் இருந்த பெரும்பாலான படங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினரதும் தி.மு.க.வினரதும் ஆகும். எம்.ஜி.ஆரைக்கூட நடிகராக அல்லாது அரசியல்வாதியாகவே அங்குள்ள படம் அறிவித்தது. ஒரு படம் இன்னமும் மனக்கண்ணில் இருந்து மறையவில்லை. தந்தை செல்வாவிடம் எம்.ஜி.ஆர். புத்தகம் ஓன்று வாங்குகிற படம். அந்தத் தீராந்திதான் அண்ணாவை கலைஞரை நெடுஞ்செழியனை எனக்கு அறிமுகப்படுத்தியது.

அப்பாவுக்கு அது தீராத கோபம். சின்னமாமாவை 'பேயன், பேயன்' என்று அப்பா திட்டுவதற்கு அதுதான் காரணமோ தெரியவில்லை. அப்பா இலங்கையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசி. மற்றும் தமிழ்நாட்டில் சிவாஜியை விரும்பியபடியாலும் காங்கிரஸ் என்ற பெயர் இருப்பதனாலும் காமராஜரை அப்பா இரசித்தார். அப்பா எவ்வழி நாங்கள் அவ்வழி. இதனால் கீரிமலை எங்களுக்கு அந்நியப்பட்டது.

<p>தென்றலைத் தீண்டியதில்லை</p>

1969இல் அறிஞர் அண்ணா காலமானார். கீரிமலை ஒருமுறை கதறிற்று. சாவீடு களை கட்டிக் கிடந்தது, கீரிமலை. கடலின் அலைகூட மௌனம் பேச மறக்கவில்லை. கடலின் அப்பாலிருந்து ஒப்பாரி ஒலி கீரிமலையை வந்தடையுமோ என நான் காத்துக் கிடந்தேன். கடற்கரையில் இருந்த வாசிகசாலையில் 'தினபதி' பத்திரிகை வாசித்தபோது இருந்த அண்ணாவின் புகைப்படம் பின்னர் கச்சிதமாகக் கத்திரிக்கப்பட்டு எடுபட்டிருந்தது

அவ்வளவு நாட்கள் செல்லவில்லை. ஒரு கையின் சுண்டுவிரலை உயர்த்தியபடியும் மறுகையில் புத்தகம் உள்ளபடியும் அண்ணாவின் சிலை கடற்கரையில் நின்றது, கடலைப் பார்த்தபடி.

பிறகு நான் வாழ்ந்த அளவெட்டிக் கிராமத்தில் இதன் எந்த அசுமாத்தத்தையும் நான் அறிந்ததில்லை. சிவாஜி - எம்.ஜி.ஆர். என்று கட்சி கட்டி நின்றோமே அல்லாது தமிழ்நாட்டு அரசியலின் வாடை அளவெட்டியில் பட்டதில்லை. நான் மாத்திரம் மனதுள் காமராஜரை விரும்பியபடி வாழ்ந்தேன்.

1972இல் தமிழ் நாட்டு அரசியல் அவ்வாறு அடங்கிப் போயிற்று மாத்திரமல்ல, வேறு திசைக்கும் திரும்பிற்று. காரணங்கள் இவை: தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். ஸ்ரீமாவோவின் அரசியலமைப்புச் சட்டம் தமிழ் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்திருந்தது. ஆயினும் கீரிமலை எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்று பிளவுற்று கிடந்தது.

1973இல் திண்டுக்கல் தொகுதித் தேர்தல் வந்தது. நாள்தோறும் 'மித்திரன்' பத்திரிகை தேர்தல் செய்தியைப் பிரசுரித்து வந்தது. 'வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது' என்றும் 'சிவாஜியின் விரல் அளவுகூட நடிக்கத் தெரியாதவர் எம்.ஜி.ஆர்' என்றும் பல்வேறு வசை வசனங்கள் அங்கு பிரயோகிக்கப்பட்டன. 'ஒரே குட்டையில் இரு மட்டைகள்' என்று காமராஜர் (கருணாநிதி - எம்.ஜி.ஆர்)இருவரையும் கூறினார். 

திண்டுக்கல் தேர்தல் முடிந்தது. எம்.ஜி.ஆர். முதலாவதாகவும் அதை அடுத்து காமராஜரும் பிறகு கருணாநிதியும் இறுதியாக இந்திராகாந்தியும் வந்தனர் என்று, அந்த வயதில் கணக்கு வைத்தேன். சிவாஜி நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் திண்டுக்கல் தொகுதியில் உள்ள சோழவந்தான் கிராமத்தில் படமாக்கப்பட்டதால் சிவாஜிக்கு அங்கு செல்வாக்கு இருக்கும் அதனால் காமராஜர் வெல்வார் என்றும் முட்டாள்தனமாக நம்பினேன்.

1975இல் காமராஜரின் இறப்பு அதிர்வினைத் தந்தது. அன்று நான் தெல்லிப்பளை ஆஸ்பத்திரிக்கு மருந்து கட்டப் போயிருந்தேன். தெல்லிப்பளைச் சந்தியில் நின்றபோது வானொலி அத் துக்கச் செய்தியை எனக்கு அறிவித்தது. என் சைக்கிள் ஓட்டம் மிகச் சோர்வாயிற்று. மதியம் சாப்பிடக்கூட அவ்வளவாக மனமில்லை. அளவெட்டியில் இத்துயர் பகிர யார் இருந்தார்? எனக்குள் மறுகினேன்.

அதற்கும் அப்பால் ஓர் ஆதங்கத்தையும் நான் கொண்டேன். முதல்வராக வரவேண்டியவர் இறந்து போனாரே என்று. (எம்.ஜி.ஆரின் பலம் அறியாத முட்டாள்தனம் அது.)

1976 இல் ஒரு மகிழ்வுச் செய்தி எனக்குக் கிட்டியது. கலைஞர் கருணாநிதியின் கோதுமைப் பேர ஊழல் வழக்கு பேசுவதற்காக ஜீ.ஜீ.பொன்னம்பலம் தன் மைந்தன் குமார் பொன்னம்பலத்துடன் தமிழ்நாட்டிற்குச் சென்றார் எனும் செய்தியே அது. வழக்குப் பேசினார், வென்றார், வந்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலம் ஆனபோது கலைஞரிடம் இருந்து அனுதாபச் செய்தியும் கண்ணீர்க் கவிதையும் வந்திருந்தது.

அதன் பிறகு, கலைஞர் 'முதல்வர் ஆனார்' எனும் மகிழ்வு எனக்கு வேண்டியிருந்தது. அதற்கான காத்திருப்புக் காலம் 14 ஆண்டுகள். ஆனால் அவ்வாறு நான் காத்திருக்கவில்லை. கலைஞர் முதல்வர் ஆனபோது மகிழ்வும் மின்னவில்லை. 

5/3/2016 5:17:02 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்