Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?

<p>கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?</p>
நெற்கொழு தாசன்

 

தோரணங்கள் இல்லை

மஞ்சள் சிகப்புநிறக் கொடிகள் இல்லை

எழுச்சி கீதங்களும் இல்லை

இது கார்த்திகைதானா

நாங்களும் தமிழர்கள் தானா..

<p>கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?</p>

 

ஒடுங்கிப்போகிறது சர்வமும்,

சவங்களா நாம்

இத்தனை திங்களாய் என்ன செய்தோம்.

 

களையிழந்து கொண்ட நிலைதொலைத்து

வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை.

மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும்

பேரிருள் மேவி கிடக்கிறது

காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது

நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது.

 

தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு

எவரெவர் கால்களில் விழுந்தோம்.

ஒப்பாரி வைத்தோம்

எவராவது பார்த்தார்களா?

 

வாருங்கள்

சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம்.

வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம்.

 

விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில்

புல் முளைத்தாலும் புலியாகுமென்று

நடுகல் உடைக்கிறான்

கண்மணிகள் கண்திறந்திடுமோவென்று

கல்லறைகள் சிதைக்கிறான்.

 

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?

 

வாருங்கள்

சுவாசித்து மீண்டும்

வேரிலிருந்து தழைப்போம்.

ஈழத்தேர் இழுக்கும் தினவு கொள்வோம்

 

மணியொலித்து

மலர்முகம் பார்த்து

நெய்யூற்றி ஒளியேற்றாத

கார்த்திகை இது கடைசியாகட்டும்.

11/27/2013 3:07:16 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்