Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

விமல் குழந்தைவேலுவின் 'கசகறணம்' நாவலுக்கு விருது

விமல் குழந்தைவேலுவின்
கருணாகரன்

 

விமல் குழந்தைவேலுவின் 'கசகறணம்' நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வழங்கும் நாவலுக்கான விருது கிடைத்துள்ளது. இது விமலின் இரண்டாவது நாவலாகும். முன்னர் அவருடைய 'வெள்ளாவி' என்ற நாவல் வெளிவந்திருந்தது. வெள்ளாவி இலங்கையில் அதிக சர்ச்சைகளை உருவாக்கிய நாவலாகவும் இருந்தது.

கசகறணம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைக் கதைக்களனாகக் கொண்ட நாவல். இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களின் கதை. இந்தச் சமூகங்கள் கடந்த 30 ஆண்டுகளுள் எப்படியான அரசியற் பொறிகளுக்குள் சிக்குண்டு சிதைந்தனர் என்பதையும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் அடையாள மாற்றங்களையும் சாட்சியமாகப் பதிவு செய்கின்ற நாவல்.

இந்த நாவலில் விமல் அறிமுகப்படுத்துகிற பாத்திரங்களும் அவர் விவரிக்கின்ற கதைக்களனும் மனதில் எழுப்புகின்ற தோற்றங்கள் அதிக வலுடையன. நாவலின் அடியோட்டமாகச் சித்திரிக்கப்படுகின்ற சமூக இணைவு பற்றிய ஆவல் முக்கியமானது. எப்படி மனிதர்கள் தங்களுக்குள் இடைவெளிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்? அவர்களுடைய உடலையும் விட, அதனுடைய தேவைகளையும் விட அவர்களுக்குள் ஊடுருவும் அரசியலும் பிற கருத்துகளும் எவ்வாறெல்லாம் அவர்களைச் சிதைத்து விடுகின்றன என்பதை விமல் மிக நுணுக்கமாக அவதானித்துள்ளார். அதை எங்களுக்கும் அவர் பகிர்கின்றார்.

போரும் இனமுரணும் சப்பிச் சிதைத்த வாழ்க்கை வரலாறுகள் எண்ணற்றவை. இனங்களுக்கிடையிலான அன்பும் பிணைப்பும் கூட இனமுரண்களால் சிதைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் ஒரு மனிதநேயப் பார்வையுடன் அணுகி, தவறுகளைத் தொடர்ந்தும் அனுமதிக்காமல் இழந்துபோன இனிய வாழ்வை மீளவும் புதிய தளத்தில் பலமாக நிர்மாணிக்க வேணும் என்று விமல் உரைப்பது முக்கியமானது.

கிழக்கு மாகாணத்தின் பேச்சுவழக்கில் - குறிப்பாக அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் உரையாடல் வழக்கில் அவர்களையே அடையாளப்படுத்தும் பாத்திரங்களின் மூலமாக இந்தக் கதைகளைச் சொல்கிறார் விமல்.

அண்மையில் வெளியாகியிருக்கும் ஈழத்து நாவல்களில் முக்கியமான ஒரு நாவல் என கசகறணத்தைத் துணிந்து கூறமுடியும்.

இந்த நாவலைத் தேர்வு செய்திருக்கிறது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) ஆண்டுதோறும் அந்தந்த வருடத்தில் வெளியான கலை இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.

விமல் குழந்தைவேலுவின்

கவிதை, சிறுகதை, நாவல், தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான எழுத்துகள், மற்றும் படங்கள், குறும்படங்களுக்கு என துறைசார் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நாவலுக்கான சிறந்த விருது, விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு கிடைத்துள்ளது.

இந்த விருது விமல் குழந்தைவேலுக்குக் கிடைத்துள்ளது என்பதை விட அவர் பாத்திரமாக்கிய மனிதர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் அந்தப் பண்பாட்டுக்கும் கிடைத்த விருது என்றே குறிப்பிட வேண்டும். மெய்யான தளத்தில் மெய்யான மனிதர்களைக் கொண்டு அவர்களின் நினைவுகளில் இருந்து ஊறிய சாற்றை எடுத்துப் படைத்திருக்கும் நாவல் என்ற வகையில் இந்த விருது அந்தக் களத்துக்கும் அங்குள்ள மனிதர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் அந்த நினைவுகளுக்கும் உரியதே. இந்த விருதை அப்படித்தான் வாசிக்க வேண்டியுள்ளது.

விமல் இந்த விருதை இப்படித்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும் தேர்வு செய்யும் நடவடிக்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கென நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கௌரவம் பெறுகின்ற படைப்பாளிகளாக பின்வருவோர் அமைந்துள்ளனர்.

1. கவிஞர் எச்.ஜி.ரசூல்

2. எழுத்தாளர் அழகிய பெரியவன்

3. சிறுகதை ஆசிரியர் ஜாகீர் ராசா

4. ஆய்வாளர் நா.மம்மது

5. மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவ்

6. இயக்குனர்களான பாரதி கிருஸ்ணகுமார் - விக்னேஸ்வரன் ஆகியோர்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முக்கியமான படைப்பாளிகள். சமூகப் பற்றாளர்கள். விடுதலை விரும்பிகள். மனிதநேயவாதிகள்.

ஆனால், தமிழகத்துக்கு வெளியே கசகறணம் நாவல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது முக்கியமானது. அம்பாறை மாவட்டத்தில், கோளாவில் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த திரு. விமல் குழந்தைவேல் தற்போது இலண்டனில் வாழ்ந்து வருகிறார். கோளாவில் பிரதேசம் பல படைப்பாளிகளைத் தந்திருக்கிறது.

விமல் குழந்தைவேலுக்கும் கசகறணத்துக்கும் வாழ்த்துகள்.

6/8/2012 1:03:01 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்