Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அம்மாவாக இருத்தல்...

அம்மாவாக இருத்தல்...
சோதியா

 

அம்மு குட்டி பின்னாலேயே 

அலைகின்றாள் அம்மா!

 

பால் நிலா காட்டி, 

பருக்கை பொறுக்கும் 

பறவைகள் காட்டி

குழைத்த சாதத்தோடு...

 

வெந்நீர் கதகதப்பு வடியுமுன்,

போர்த்திய புழுதி கழுவி

பூச்சட்டை போட்டுவிட

துவட்ட எடுத்த துண்டோடு...

 

எண்ணெய் காட்டி

வகிடெடுத்து வாரிவிட்டு

இரட்டை பின்னலிட

சீப்போடும் சிவப்பு ரிப்பனோடும்....

 

அரக்கனை வென்று வந்த

அரசன் மகன் கதை சொல்லி

அருகணைத்து உறங்கவைக்க

அம்புலிமாமா இதழோடு....

 

ஆனாலும் 

அடம்பிடிப்பாள் அம்முகுட்டி

கைகளுள் பொற்றிய காற்றாய்

நழுவிவிடுவாள்

ஒரு பொழுதில்....

தனது 'பார்பி’

பொம்மைக்கு மட்டும்

பொறுப்புள்ள அம்மாவாய்

பொருந்திப் போகிறாள்!

 

நேரம் கழிவது தெரியாமல்

நீராட்டுகின்றாள்

வெள்ளிமுடி வாரிவிட்டு

வெள்ளைப்பூ வைக்கின்றாள்

திறந்திடா இதழ்களில்

தீனியற்ற வெற்றுக்கரண்டியை

திரும்ப திரும்ப திணிக்கின்றாள்

சுடரும் விழியுருட்டி

சுட்டு விரல் காட்டி

மிரட்டுகின்றாள்

அவ்வப்போது உச்சிமுகர்ந்து

அன்புகாட்டி அணைக்கின்றாள்

தலைகீழாய் தாங்கிய 

புத்தகத்தில் முகம்புதைத்து

புரியாத மொழியில்

புதிதாய் கதைகள் படிக்கின்றாள்.

 

அடம்பிடிக்காமல்

அவளுடனேயே உறங்கிவிடுகிறது

'பார்பி’ பொம்மை

 

அம்மாவாக இருத்தல் ஆனந்தம்!

 

18.08.16                                              

8/20/2016 12:04:44 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்