Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஒட்டகமும்   ஜல்லிக்கட்டும்

<p>ஒட்டகமும்   ஜல்லிக்கட்டும்</p>
தம்பா

 

விடியும் சுதந்திர  தினத்தில்

அசோக சக்கரவர்த்தியின்

`தர்ம சக்கரத்தை´

நெற்றியில் பச்சை குத்தியும்

நெஞ்சினில் குறி சுட்டும்

கொடியில் பதித்தும்

`எமது உயரிய மரபு´ என்று

போற்றிக் கொண்டாடு .

 

மாலை

சஹாராப் பாலைவனத்தை

அருகில் அழைத்து ரசித்து காதலிக்க

உலகத்தின் தேசிய சொத்தை

பருகிப் பருகி 

கபாளிகரம் செய் அண்ணா

கபாளிகரம் செய்.

 

ஜல்லிக் கட்டு

வீர விளையாட்டுக்குப் பதில்

ஒட்டகத்திற்கு தண்ணி கட்டி

விளையாடலாம் வா தம்பி வா..

 

பாலைவனத்தில் ஒரு துளி நீரோடு

வாழும் கலையை

எனக்கு கற்றுதர துடிக்கும்

உங்கள் பேரார்வத்திற்கு

தலை வணங்காமல் இருக்க முடிந்ததில்லை.

 

உங்கள் மனைகளில் மிளிரும்

நீச்சல் குளத்திற்கு

நீர் தட்டுப்பாடு வராதிருக்க

அணைக்கட்டுகளின் மீது யாகம் நடாத்திட   

எனது தோட்டத்து தானியங்கள்

வர வேண்டி தவமிருக்கும்

உங்கள் அன்பிக்காக 

நான் எனது உயிரையே

பட்டயம்  எழுதி தருகிறேன் சகோதரா.

 

எதிரிகள் எல்லைகளில்

போர் பிரகடனம் 

செய்யும் போதெல்லாம்

எனது வீரம் பற்றி புகழ்ந்துரைக்கும்

உங்களது உயர்ந்த உள்ளம்

பற்றியும் வியக்காமலும்

இருக்க முடிந்ததில்லை.

 

ஆனாலும் பேரரசர் அசோகரோ

துணைக்கண்டம் முழுவதையும்  கைப்பற்றி

ஆண்ட போதிலும்

தென்னகத்தை  கைப்பற்றி ஆளும் கனவை

தவிர்த்து வந்தது

அதிசயத்திலும் அதிசயம் தோழா! 

 

நிற்க,

ஈராயிரம் ஆண்டுகளிற்கு முன்பே

அசோக சக்கரவர்த்தி

'வாழுங்கள், வாழ விடுங்கள்' என்று

குடி மக்களுக்கு ஆணை பிறப்பித்தது

ஏன் என்று கூறுங்கள் சகோதரர்களே?

ஏன் என்று கூறுங்கள்?

1/26/2017 2:45:10 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்