Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

காற்றில் கடவுளை செதுக்கு!

தம்பா

கரையான்கள் ஒருபோதும்

கடினமான பாறைகளில்

குடியேறுவதில்லை.

பலவீனமான மண்ணை

தெரிவு செய்தே 

புற்று அமைப்பதை

வழக்கப்படுத்திக் கொண்டன.

 

தர்மவான்கள்  எப்போதும்

காடுகள் மலைகள் என

கடினங்களை காதலித்து குடியமர்ந்தனர்.

 

ஆனால் அதர்மவான்களோ

எரித்து சாம்பலான

அந்நிய நிலங்களையும் கழனிகளையும்

தெரிவு செய்தே

மடாலயங்கள் அமைத்தனர்

 

ஆசைகளின் ஆக்கிரமிப்பை துறந்து

அகிம்சையினால் உலகை வெல் ´

என  தர்மபிரான்.சொன்னதாக

ஒலிபெருக்கிகள் ஊரை எழுப்பின.

 

விடாது ஒலிக்கும் போர்ப்பறையினுடே

சாவை அருகில் அழைத்து

மடியில் முடிந்து

தசாப்தங்களாக  வனத்தில்

துறவு வாழ்வு வாழ்ந்தவர்களை

தர்மபிரான் தேடி

அணைத்து ஆசிர்வதித்தவர்

நாடு திரும்பும் அகதிகளைக் கடந்து 

நீண்ட கடல் பயணத்தில் அகதியானார்.

 

அகதி முகாம்களின்

பெருக்கத்தை களைந்து  

மனங்களில் முகாமிட்டு

அமைதியை  பெருக்குங்கள்.´ என

வானில் அசரீரி

கேட்டவண்ணம்  இருந்தது.

 

தத்துவங்களை தவிக்கவிட்டு

தன்னாதிக்கத்தை தவழவிட்டு

கட்டிடத்துள்  கடவுளை சிறை வைத்து

மதத்தை கொன்று

நிறமிழந்த வானவில்லை

தொழும் கனவு வாழ்க.

 

ஆயிரம் கிளைகள்   நாட்டி

காடுகளை  உருவாக்கலாம்.

ஆயிரம் மடாலயங்களை காட்டி 

நாடுகளை உருவாக்க முடியாது.

 

கரையான் புற்றின்

இறுதிச் சொந்தக்காரர்கள்

எப்போதும்  பாம்புகள் தான்

என்பதை

நினைவு படுத்தி விடாதீர்கள்.

12/12/2016 6:42:17 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்