Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எங்கள் காணிகளை எரித்தனர்

<p>எங்கள் காணிகளை எரித்தனர்</p>
தமிழாக்கம்: கவிதா லட்சுமி

 

அவர்கள் எங்கள் காணிகளை எரித்தனர்

அவர்கள் எங்கள் ஆண்களை கொன்றனர்

சுத்தியால் அறையப்பட்டன எம் இதயங்கள்.

இதையே அவர்கள் மீளமீள நிகழ்தினர்

 

கோரமான அழுத்தமான அடிகளால்

எங்கள் நெஞ்சைக் கொத்தினர்

எங்கள் காணிகளை அவர்கள் எரித்தார்கள்

இன்றும் அவர்கள் இதையே செய்தார்கள்

 

அவர்கள் எங்கள் காணிகளை எரித்தனர்

அவர்கள் எங்கள் ஆண்களை கொன்றனர்

 

எங்கள் மரணித்த ஒவ்வொருவரின் பின்னாலும்

ஆயிரமாய் எழுந்தனர்

பிடிவாதமிகுந்த பூரண நிர்வாணிகளாய்

இன்னும் ஆயிரம் பேர் தூண்களாய்க் கூடினர்.

 

ஓ... மரணித்த தோழர்களே!

எதுவாகினும்

எம்மை மேய்ப்பதற்கில்லை அவர்கள்.

***

மூலக்கவிதை (நோர்வேஜியன்): Inger Hagerup (14.04.1905 – 06.02.1985)

இவர் 19ஆம் நூற்றாண்டின் முக்கிய நோர்வேஜிய பெண் படைப்பாளுமையாகக் கருதப்படுபவர். எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர் எனப் பன்முகப் படைப்பாளி.

2ஆம் உலகப் போர் காலப்பகுதியில், குறிப்பாக நோர்வே ஆக்கிரமிக்கப்பட்ட காலப்பகுதியில் போரும் வாழ்வும், விடுதலை பற்றிய பாடு பொருளில் காத்திரமான கவிதைகளை எழுதியவர்.

இது அவருடைய அதிகம் பேசப்படுகின்ற கவிதைகளில் ஒன்று. இதன் நோர்வேஜியத் தலைப்பு ‘Aust Vågøy ' என்பதாகும்.

Austvågøy - வட நோர்வேயின் Lofoten இல் அமைந்துள்ள தீவின் பெயர். 2ம் உலகப் போரில் ஜேர்மன் படைகளுடனான மோதல்கள் இத்தீவில் இடமபெற்றன. அந்த அடிப்படையில் குறியீட்டு அர்த்தம் கொண்ட தலைப்பு.

10/31/2016 12:52:09 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்