Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அனாமிகாவும் ஆறு மெழுகுவர்த்திகளும்

<p>அனாமிகாவும் ஆறு மெழுகுவர்த்திகளும்</p>
சோதியா

 

நாட்குறிப்பின்

பக்கங்கள் படபடக்க

பார்வை

இன்றைய தேதியில்

இறங்கி நிலைத்தது.

இன்றும்..

இறுக்கமான நிகழ்ச்சிநிரல் தான்

***

காலை 8 மணி:

ஆசிரிய மாணவர்களுக்கான

பயிற்சிப் பள்ளியில்

வளப் பகிர்வும்

வழிகாட்டற் கருத்தமர்வும்

தலைப்பு...

'மாணவர் மனங்களை புரிந்துகொள்ளல்’

 

முற்பகல் 11 மணி:

உயர்தர வகுப்பின்

உளவியல் பாடநெறிக்கான

கற்பித்தலும்

கலந்தாய்வுக் களமும்

தலைப்பு ...

'பெற்றோர் பிள்ளைகள் இடைவெளி’

 

பிற்பகல் 2 மணி:

அக்னி புத்திரனின்

ஆற்றுப்படுத்தல் சிறுகதைகளின்

மறுபதிப்பிற்கான

மதிப்பீட்டு உரை

தலைப்பு ...

'இல்லறத்தில் காதலும் காயங்களும்’

 

மாலை 6 மணி:

முல்லைத்தளிர் தமிழ்ப் பள்ளியின்

முதலாவது ஆண்டுவிழா

பாலகர்களுக்கு பரிசளிப்பு

பெற்றோருக்கு பேருரை

தலைப்பு ...

'பிள்ளைகளின் எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்’         

***

மாலை மரியாதை

பொன்னாடை புகழுரை

போதைதான் எல்லாமே!

தொடர்ந்து

நண்பர்கள் சிலரோடு

அரசியல் அரட்டை.

கூடவே

அற்ககோலும்

ஆட்டிறைச்சி பிரட்டலும்

போதுமென எழுந்தபோது,

இன்றைய நாள்

இறந்து கொண்டிருந்தது.

 

அழைப்பு மணியின்

அடுத்தடுத்த அலறல்களின் பின்

கதவு திறந்தது

காற்சிலம்பில்லாத கண்ணகியாய்

தோன்றி மறைகின்றாள் மனைவி.

கூடத்து இருக்கையிலேயே

துவண்ட முல்லைக்கொடியாய்

ஆழ்துயிலில் கிடக்கிறாள்

அனாமிகா குட்டி.

அருகே ...

வெட்டப்படாத பிறந்தநாள் கேக்

ஏற்றப்படாத ஆறு மெழுகுவர்த்திகள்

 

அருகமர்ந்து

ஆதரவாய் தலைகோதினேன்.

மூச்சிழுத்து

நெற்றியில் முத்தம் பதித்தேன்

உறக்கத்திலும் சிரிக்கின்றாள்.

ஒருகால்,

பிரியமான தேவதைகளோடு

பிறந்தநாள் கொண்டாடுகின்றாளோ?

தண்ணீருண்ட தவிட்டுப் பொதியாய்

கனக்கிறது நெஞ்சு!

1/14/2017 6:01:55 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்