Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தேவர்களும் சிறை செல்லலாம்

தேவர்களும் சிறை செல்லலாம்
தம்பா

 

வறுமையை அள்ளிக் கொடுத்து

செல்வத்தை வறுத்தெடுத்த கிராமம்.

 

பட்டினிக்கு நிவாரணமாக

மடாலயங்களில் பால்ய பருவத்தை

அடைவு தந்த தந்தை.

 

பல வர்ண கனவுகளும்

பல வர்ண உடைகளும்

வெளிறி பழுத்து

மஞ்சள் நிறமானது.

 

பகலை இரவாக்கி

இரவை பகலாக்கி

விந்தை புரிந்த துறவி

போரை சமாதானமாக்கி

சமாதானத்தை போராக்கி

காயான மனதை

புகை போட்டு பழுக்க வைத்தார்.

 

பன்பருவத்து ஆத்மீகம்

உடலோடு வளரமறுக்க

'கடவுளையும் நாட்டையும்

உயிரிலும் மேலாய் வை'

என நெற்றியில்

அரச மரத்து கிளை நாட்டி

'எப்போதும் அசுரர்கள்

வட திசையிலிருந்து வருவார்கள்.'

என மந்திரித்து

ஆலமரமாய் செழிக்க வைத்தார்.

 

வெளிறிய கனவும்

வெளிறிய உடையும்

அகிம்சையின் ஆசிர்வாதத்தால்

பல வர்ணம் பூண்டது.

 

நீலவானில் இடி இடித்தது

உச்சி வெய்யிலில் இருள் இருந்தது.

 

வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள்

காடெங்கும்

சிவப்புக் கம்பளமாய் விரிந்தார்கள்.

 

பகைவர் அற்ற போர்

உயிர் பறிக்கும் அகிம்சை

விழியற்ற பார்வை

மொழியற்ற பேச்சு.

 

பணத்தையும் நிலத்தையும்

அவர்கள் எண்ண

பிணத்தையும் மானத்தையும்

இவன் எண்ணினான்.

 

சரணடைந்த சகோதரிகளுக்கு

வன்புணர்வை பரிசாகத் தந்து

உயிரை பண்டமாற்றாக பெற்றவர்கள்

பத்திரிகைகளில் தேவர்கள் ஆனார்கள்.

 

சகோதர சகோதரிகளின்

மானம் காக்க

தன் உடை தந்து

'பரிபூரண நிர்வாணம்' ஆனான் அவன்.

 

பட்டப் பகலில்

வானில் பவுர்ணமி நிலவு

சூரியனை மறைத்து

தீயை உமிழ்ந்தது.  

11/17/2016 2:04:48 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்