Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சுடர் ஏற்றுங்கள்!

சுடர் ஏற்றுங்கள்!
ஐவின்ட் ஸ்கைய (தமிழில்: ரூபன் சிவராஜா)

 

சுடர் ஏற்றுங்கள்!

ஒரு சுடர் எரியட்டும்

இந்த சிறிய பூமிக்கு,

நாம் வாழும் இந்த

அகன்ற வானத்து நட்சத்திர வெளியில்

 

நல்லன சித்திக்க வேண்டி

நம்பிக்கையை

எல்லோரும் பகிர்வோம்

பூமியும் வானமும்

சங்கமிக்க வேண்டும்.

அதற்காகவே

ஒருசுடர் ஏற்றப்பட்டுள்ளது.

 

சுடர் ஏற்றுங்கள்!

இரு சுடர் ஒளிரட்டும்

காதலுக்கும் நம்பிக்கைக்குமாக,

மானிடத்தின் பால்

பரிவு கொண்டவர்க்காகவும்,

எப்பொழுதும் உறவுப்பாலம்

அமைப்பவர்க்காகவும்!

 

கைதிகள்

விடுதலை அடையவும்

இருப்பிழந்தோர்

வீடுகளைப் பெறவும்,

அழுபவர்களுக்காகவும்

அவர்களை

ஆற்றுப்படுத்துவோருக்காகவும்

சுடரினை ஏற்றுங்கள்.

 

சுடர் ஏற்றுங்கள்!

மூன்று சுடர்

சுவாலை விட்டெரியட்டும்

சரிநிகர் வாழ்வுக்காக,

நீதிக்கும் விடுதலைக்கும்

போராடியவர்களுக்காக...

 

எல்லா மக்களும் ஒன்றுபடும் வரை

எவருமே உறுதி தளரலாகாது

சுடரினை ஏற்றுங்கள

விடுதலைக்கும்,

உரிமைக்கும்

போராடியவர்களுக்காக!

 *மூலம்: நோர்வேஜிய எழுத்தாளரும் கவிஞருமான ஐவின்ட் ஸ்கைய (Eyvind Skeie) 

12/31/2012 1:44:44 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்